ஆதார் எண் கட்டாயம் இல்லை; மாநிலங்களவையில் தீர்மானம்!

வங்கி கணக்கு, மொபைல் எண்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற சட்டத்திருத்த மசோதாக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது!

Last Updated : Jul 8, 2019, 09:00 PM IST
ஆதார் எண் கட்டாயம் இல்லை; மாநிலங்களவையில் தீர்மானம்! title=

வங்கி கணக்கு, மொபைல் எண்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற சட்டத்திருத்த மசோதாக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது!

மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன், ஆதார் எண் இணைப்பதற்கு, வாடிக்கையாளர்களுக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், ஆதார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு, மக்களவையில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது விவாதங்களுக்கு பின் மாநிலங்களவையிலும் ஒப்புதல் அளித்துள்ளது.

இரு அவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திருத்தப்பட்ட சட்ட மசோதாவை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து அவரது ஒப்புதலை பெறவுள்ளது.

வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் மொபைல் போன் இணைப்புகளை வாங்குவதற்கும் அடையாள சான்றாக ஆதார் அட்டைதாரர்கள் பயன்படுத்த அனுமதிக்க இந்த மசோதா முன்மொழிகிறது. இந்த மசோதா ஆதார் சட்டம் 2016-ஐ திருத்த முயல்கிறது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட திருத்தங்களை நிராகரித்ததுடன், மொபைல் எண்கள் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் பயோமெட்ரிக் ஆதார் ஐடியை தானாக முன்வந்து விதைப்பதற்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதற்கான விவாதங்களின் போது மையத்தை விமர்சித்தது.

ஆதார் தொடர்பான தனி நபர் தகவல்களை பாதுகாப்பதற்கு கடுமையான விதிகளையும் இச்சட்டத்திருத்த மசோதா அமல்படுத்த உள்ளது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் ஆதார் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசுகையில், ஆதார் அட்டை தொடர்பான சட்டம் மக்களுக்கு இசைவானதாக இருக்கும் என்று உறுதியளித்தார். ஆதாரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்த குடிமகனும் ஆதார் அட்டையை காண்பிக்க கட்டாயப்படுத்தப்பட மாட்டார் என்ற போதும், அவரவர் விருப்பத்தின் பேரில் ஆதாரை ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டு இருந்தார். 123 கோடி மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளனர் என்றும் அவர்களில் 70 கோடி பேரின் செல்போன் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். வங்கிக்கணக்கு தொடங்குவதற்கும், செல்போன் இணைப்பை பெறுவதற்கும், பல்வேறு அரசு சேவைகளிலும் ஆதார் அட்டையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுவதற்கு இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது எனவும் குறிப்பிட்டி இருந்தார்.

Trending News