மானியமில்லாத வீட்டு உபயோக LPG எரிவாயு சிலிண்டர்கள் நாளை (ஜூலை 1) முதல் புதுடெல்லியில் ரூ .100.50 வரை மலிவாக கிடைக்கும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படும். சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்நிலையில், நாளை மாதத்தின் முதல்நாளையடுத்து இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.
அந்த வகையில் புதுடெல்லியில் நாளை முதல், மானியமில்லாத LPG எரிவாயு சிலிண்டர்கள் ஒரு சிலிண்டருக்கு ரூ .637 க்கு கிடைக்கும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. முன்னதாக மானியமில்லாத உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலை சிலிண்டருக்கு ரூ .737.50-ஆக இருந்தது.
Indian Oil Corporation: As domestic LPG prices are subsidized by the Government, the effective price after subsidy to consumer will be Rs 494.35 per cylinder for the month of July 2019. https://t.co/2YQs6da0Jw
— ANI (@ANI) June 30, 2019
LPG எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு இது வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், LPG விகிதங்களைக் குறைப்பதற்கான முடிவு சர்வதேச சந்தையில் விலைகளை மென்மையாக்குவதையும், சிறந்த டாலர் ரூபாய் மாற்று வீதத்தையும் கருத்தில் கொண்டு இந்த விலை குறைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், புதிய விகித திருத்தத்திற்குப் பின்னர் மானிய விலையில் LPG சிலிண்டர் ரூ .494.35 ஆகக் குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகை [சிலிண்டருக்கு ரூ .142.65 (மானியத்துடன்)] இப்போது மத்திய அரசால் ஏற்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மீதமுள்ள தொகை மறு நிரப்பல் வாங்கிய பின்னர் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும் என்று வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.