அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை அன்று பயிலும் மாணவர்கள் பள்ளிப் பை கொண்டு வராமல் பள்ளிக்கு வர வழி வகை செய்வது குறித்து உத்தரப்பிரதேச அரசு திட்டமிடப்பட்டு வருகிறது.
இது குறித்து பரிசீலிப்பதாக உத்தரப்பிரதேச மாநில துணை முதல் தினேஷ் ஷர்மா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரும் சிறார்கள் பாடப் புத்தகப் பையைக் கொண்டு வராமல், அன்றைய தினம் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தினால், பள்ளி மாணாக்கருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு, பள்ளிச் சிறார்கள் காக்கி சீருடையை மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.