வங்கிகளில் செக் புக் திரும்பப் பெறும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஊடகங்களிடம் அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயத்தை அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு எதிர்காலத்தில் வங்கிக் செக் புக் திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் தனது டிவிட்டரில் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்ததுடன் இரண்டு கருத்துகளை பதிவிட்டுள்ளது. அதில்,
> வங்கிக் செக் புக்குகளை திரும்பப் பெற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகும தகவலில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
> டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தையை ஊக்குவிக்கும் வகையில் செக் புக்குக்கு மூடுவிழா காணப்பட உள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வருகிறது அது உண்மையில்லை மத்திய அரசு இதுபோன்றதொரு எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று கருத்து பதிவிடப்பட்டுள்ளது.