சன்டே ஸ்கூல் உண்டு... முதல்வர் அறிவிப்பு - என்ன காரணம்?

சுதந்திர தினத்தை ஒட்டி அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் போட்டிகள், நிகழ்வுகளுக்காக நாளை (ஆக. 13) பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 12, 2023, 10:53 PM IST
  • மாணவர்கள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.
  • மேரி மாத்தி மேரா தேஷ் பிரச்சாரத்தின் கீழ் இது நடைபெறுகிறது.
  • இது ஆக. 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடக்கிறது.
சன்டே ஸ்கூல் உண்டு... முதல்வர் அறிவிப்பு - என்ன காரணம்? title=

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் ஹர் கர் திரங்கா மற்றும் மேரி மதி மேரா தேஷ் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநிலத்தின் அனைத்து தொடக்கப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 13) திறக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரசால் வெளியிடப்பட்ட உத்தரவுகளின்படி, அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு மதிய உணவு வழங்கப்படும். யோகி ஆதித்யநாத் அரசு பள்ளிகளில் ஹர் கர் திரங்கா மற்றும் மேரி மதி மேரா தேஷ் திட்டங்களின் தேதி வாரியான அவுட்லைனை நிர்ணயித்துள்ளது.

இதன்படி ஆகஸ்ட் 13ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு கவிதைப் போட்டி நடத்தப்படும். பொது விடுமுறை காரணமாக பள்ளிக் குழந்தைகளுக்கு சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் மதிய உணவு ஆணைய இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க |  வருகிறது சுதந்திரம் தினம்... இது 76ஆவது ஆண்டா இல்ல 77ஆவதா? - குழப்பமே வேண்டாம் பதில் இதோ!

அனைத்து அடிப்படைக் கல்வி அலுவலர்களுக்கும் பிறப்பித்த உத்தரவில், ஆசாதி கா அமிர்த் மஹோத்சவ் திட்டத்தின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, 'மேரி மாத்தி மேரா தேஷ்' பிரச்சாரத்தின் கீழ் அனைத்து கிராம பஞ்சாயத்துகள், நகர் பஞ்சாயத்துகள், மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, உள்ளாட்சி நகர்ப்புற அமைப்புகள் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை கடைபிடிக்கப்படுகின்றன.

அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி பள்ளிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளில் நடைபெறும் அனைத்து தினசரி நிகழ்வுகளின் புகைப்படங்களும் துறை போர்ட்டலில் பதிவேற்றப்படும் என்று உத்தரபிரதேச அரசிடம் இருந்து பெறப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட இயக்குனரகத்தின் நோடல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஹர் கர் திரங்கா

'ஹர் கர் திரங்கா' என்பது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் தேசிய கொடியான மூவர்ண கொடியை வீட்டிற்கு கொண்டு வர மக்களை ஊக்குவிப்பதற்காகவும். இந்தியாவின் 75ஆவது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் அதை ஏற்றுவதற்காகவும் நடத்தப்பட்டது. கொடியுடனான எங்கள் உறவு எப்போதும் தனிப்பட்டதை விட முறையானது மற்றும் நிறுவனமானது. சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டில் ஒரு தேசமாக கொடியை வீட்டிற்கு கொண்டு வருவது தேசிய  தனிப்பட்ட தொடர்பின் அடையாளமாக மட்டுமல்லாமல், தேசத்தை கட்டியெழுப்புவதற்கான மக்களின் அர்ப்பணிப்பின் உருவகமாகவும் மாறும். மக்களின் இதயங்களில் தேசபக்தியின் உணர்வைத் தூண்டுவதும், இந்திய தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதும் இந்த முயற்சியின் பின்னணியில் உள்ளது. 

மேரி மாத்தி மேரா தேஷ்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 30 அன்று மன் கி பாத்தின் 103ஆவது பதிப்பின் போது 77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட ஒரு தனித்துவமான யோசனையை மேற்கோள் காட்டி பேசினார் . அமிர்த மஹோத்சவ் கொண்டாட்டத்தின் போது அவர் 'மேரி மாத்தி மேரா தேஷ்' பிரச்சாரத்தை அறிவித்தார். ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை இந்த பிரச்சாரம் தியாகிகளான துணிச்சலானவர்களை கௌரவிக்கும் மற்றும் பாராட்டும் வகையில் நடக்கும். 

மேலும் படிக்க | செங்கோட்டையில் சுதந்திர தினவிழா நேரில் பார்க்க ஆசையா? ஆன்லைனில் புக் செய்யும் வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News