நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்

தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமாரின் சீராய்வு மனு மீதான விசாரணை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 17, 2019, 04:35 PM IST
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலகல் title=

புது டெல்லி: நிர்பயா பாலியல் வன்கொடுமை (Nirbhaya Gang Rape Case) வழக்கில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமாரின் சீராய்வு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஆர். பானுமதி மற்றும் அஷோக் பூஷன் என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்பொழுது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இந்த சீராய்வு மனு மீதான விசாரணை வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இந்த வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு வேறு அமர்வில் விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே விலகுவதற்கு முக்கிய காரணம், இந்த வழக்கில் பழைய விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர்களின் பட்டியலில் தலைமை நீதிபதியின் உறவினரின் பெயர் உள்ளது. எனவே இந்த வழக்கில் தலைமை நீதிபதி விலகி கொண்டார். இந்த வழக்கை இப்போது நாளை (புதன்கிழமை) புதிய பெஞ்ச் விசாரிக்கும். நீதிமன்றத்தின் மறுபரிசீலனை மனுவை எதிர்த்து நிர்பயாவின் தாயும் தாக்கல் செய்த வழக்கிலும் இன்று விசாரிக்கப்பட வேண்டி இருந்தது. ஆனால் இன்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

16 டிசம்பர் 2012 அன்று நிர்பயா நகரும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மோசமாக காயமடைந்த சிறுமி பின்னர் இறந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான கற்பழிப்பு சம்பவத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் கோபம் பரவியது மற்றும் எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. 

23 வயதான நிர்பயா 2012 டிசம்பர் 16-17 தேதிகளில் இரவு நகரும் பேருந்தில் ஆறு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்பு நகரும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். சாலையில் வீசப்படுவதற்கு முன்பு அவர் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

பின்னர் நிர்பயா டிசம்பர் 29, 2012 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார், பின்பு சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார், மற்றொருவர், சீர்திருத்த இல்லத்தில் வைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்ற நான்கு குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது, பின்னர் இது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News