பண்டா: பந்தா (Banda) பகுதியில் லாரி மற்றும் உத்தரபிரதேச அரசு பஸ் பலமாக (Truck-roadways bus collided) மோதியது. இந்த சோகமான விபத்தில் இதுவரை 9 பேர் ஒரு இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இன்னும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து பற்றிய தகவலுக்குப் பிறகு, காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணியை மேற்கொண்டு, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்தனர். திண்ட்வாரி காவல் நிலைய பகுதியில் உள்ள சைமரி நாலா அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த அரசு பஸ்ஸில் சுமார் 45 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஃபதேபூரிலிருந்து பண்டாவுக்கு வந்து கொண்டிருந்த பஸ், திண்ட்வாரி காவல் நிலைய பகுதியில் குர்சேஜா சவுக்கி அருகே, எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்திலேயே மிகப்பெரிய அலறல் சத்தம் கேட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் போலீஸ் அவசர எண் 100 -க்கு தொடர்பு தகவல் தெரிவித்ததால், அவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பலத்த காயமடைந்தவர்கள் ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறையினரின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. மேலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை அன்று இதே போன்ற சம்பவம் ஒன்று மகாராஷ்டிராவில் அரங்கேறியது. அதைப்பற்றி பார்ப்போம்.
இரண்டு பேருந்துகள் மகாராஷ்டிராவின் லாத்தூர் மற்றும் ஷோலாப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தன. அவர்கள் ஆன்மீக குருவைச் சந்திக்க ஹரியானாவின் ஹிசார் சென்று கொண்டிருந்தனர்.
குச்சமான் நகரத்திற்கு அருகே ஒரு பேருந்து ஹனுமங்காத் மெகா நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, சாலையில் இருந்த ஒரு காளையைப் பார்த்த ஓட்டுநர், அதனை காப்பாற்றும் முயற்சியில், பேருந்தை உனடியாக திருப்பியதால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியது. இதனால் அந்த பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு பேருந்தின் ஓட்டுநரும் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதினார்.
இதனால் மரத்தில் மோதிய பேருந்தின் மீது பின்னல் வந்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒரு குழந்தை மற்றும் நான்கு பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர் எனக் கூறப்பட்டு உள்ளது. இதுவரை காயமடைந்த ஒன்பது பேரில் 6 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ளவர்கள் கச்சுமனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.