இந்த இடங்களில் மீண்டும் ஊரடங்கு: அதிகரிக்கும் கோவிட்-19 எண்ணிக்கை, அச்சுறுத்தும் ஒமிக்ரான்

கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உலக மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர கோவிட்-19 ஆல் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2021, 08:54 AM IST
இந்த இடங்களில் மீண்டும் ஊரடங்கு: அதிகரிக்கும் கோவிட்-19 எண்ணிக்கை, அச்சுறுத்தும் ஒமிக்ரான் title=

கொரோனா தொற்றின் தாக்கத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட உலக மக்கள் தற்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உலக மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர கோவிட்-19 ஆல் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இந்த அச்சங்களுக்கு மத்தியில் இந்தியாவில் பல மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசத்தில் சனிக்கிழமை இரவு முதல் இரவு ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்த யோகி ஆதித்யநாத் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, ஊரடங்கு சட்டம் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். திருமணங்களில் அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்துகொள்ளலாம். இவற்றைப் பற்றிய தகவல்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

அனைத்து கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளும் "முகக்கவசம் இல்லையேல், பொருட்கள் இல்லை" என்ற கொள்கையை பின்பற்றுமாறு உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து உ.பி.க்கு வருபவர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ரயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர்நீதிமன்றம் கோரிய ஒரு நாள் கழித்து உத்திரபிரதேச இரவு ஊரடங்கு உத்தரவு வந்துள்ளது.

வியாழன் அன்று உத்திர பிரதேசம் முழுவதும் முப்பத்தொரு பேர் புதிதாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏப்ரல்-மே மாதங்களில் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், திடீரென அதிகரிக்கும் எண்ணிக்கையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தில் இதுவரை இரண்டு பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, இரவு நேர கட்டுப்பாடுகளை விதிக்கும் இரண்டாவது மாநிலமாக உத்திர பிரதேசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சுகாதார நிலைமையை மனதில் வைத்து, கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த, பல மாநிலங்கள் கிறிஸ்துமஸ் முதல் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன.

ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை? 

மத்திய பிரதேசம்

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று கூறினார். மாநிலத்தில் இன்னும் யாருக்கும் ஓமிக்ரான் கோவிட் (COVID-19 https://zeenews.india.com/tamil/health/omicron-infection-increased-to-23...) தொற்று பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மகாராஷ்டிரா

ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கையில் மகாராஷ்டிரா 100-ஐ தாண்டிய நிலையில், மாநிலம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பல இரவு நேர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

குஜராத்

குஜராத்தில், ஓமிக்ரான் பரவல் காரணமாக, எட்டு நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இது நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இருந்தது. அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, ஜூனாகத், ஜாம்நகர், பாவ்நகர் மற்றும் காந்திநகர் ஆகிய நகரங்களில் டிசம்பர் 25 முதல் புதிய ஊரடங்கு நேரம் அமல்படுத்தப்படும். குஜராத்தில் இன்று கொரோனா தொற்றால் 98 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 3 பேர் இறந்தனர். மேலும், திங்களன்று மாநிலத்தில் 13 பேர் புதிதாக ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இதுவரை 43 பேருக்கு ஓமிக்ரான் (Omicron ) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஹரியானா

ஹரியானாவும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் கூடுவது அனுமதிக்கப்படாது, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என்று ஹரியானா முதல்வர் அலுவலகம் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. ஹரியானாவில் ஜனவரி 1 முதல் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Corona New variant: கோவிட் நோய் அதிகரிப்பதற்கு காரணம் ஒமிக்ரானா இல்லை டெல்மிக்ரானா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News