NIA: இந்தியாவில் தீவிரவாத பயிற்சி மையங்களை உருவாக்க சதித் திட்டம், 10 பேர் கைது

சில சந்தேக நபர்களை NIA பிடித்தபோது, அவர்களைப் பற்றிய பெரிய தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்புடன் மட்டுமல்லாமல், அல்கொய்தா (Al Qaeda) தீவிரவாத அமைப்புடனும் தொடர்புகள் இருப்பது வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 08:23 PM IST
NIA: இந்தியாவில் தீவிரவாத பயிற்சி மையங்களை உருவாக்க சதித் திட்டம், 10 பேர் கைது title=

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ISIS உடன் தொடர்புடைய  7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency) கைது செய்துள்ளது, அவர்களில் மூன்று பேர் பங்களாதேஷ் பயங்கரவாதிகள். அவர்கள் இந்தியாவில் வெவ்வேறு தொகுதிகளை உருவாக்கி வருவதாகவும், இந்தியாவின் இரு மாநிலங்களில் உள்ள வனப் பகுதிகளில் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.  

சந்தேக நபர்களை NIA பிடித்தபோது, அவர்களைப் பற்றிய பெரிய தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்புடன் மட்டுமல்லாமல், அல்கொய்தா (Al Qaeda) தீவிரவாத அமைப்புடனும் தொடர்புகள் இருப்பது வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை கடந்த ஆண்டே தொடங்கப்பட்டது. அவர்களில், பிர்பம் மாவட்டத்தைச் சேர்ந்த ரபியுல் இஸ்லாம் என்பவரும் கைது செய்யப்பட்டவர். அவர் மிகவும் தீவிரமாக இந்த கும்பல்களுடன் இயங்கி வந்திருக்கிறார். அதேபோல் பங்களாதேஷில் வசிக்கும் அல் மாமுன், அல் அமீன் மற்றும் மொஹ்சின் ஆகியோரும் நீண்ட காலமாக பயங்கரவாத சித்தாந்தத்தை பின்பற்றுவதும் தெரியவந்துள்ளது. இவர்களை பில்பூமின் உலுபீரியாவில் இருந்து இருந்து கொல்கத்தா அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.  

Read Also | money laundering case: பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் கைது, ஜாமீன் நிராகரிக்கப்பட்டது

பங்களாதேஷ் ஐ.எஸ் தலைவருடன் நெருக்கமாக இருந்தார் மொஹ்சின்

பங்களாதேஷில் ஐ.எஸ் தலைவராக இருந்த நஸ்ருல்லாவுடன், மொஹ்சின் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் அங்கு நஸ்ருல்லா பிடிபட்ட பிறகு, அவர் மற்றவர்களுடன் இந்தியாவுக்குத் தப்பி உலுபீரியாவில் வாழத் தொடங்கினார்.

37 பேரை பயங்கரவாத கும்பலில் சேர்த்த ரபியுல்  

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய ரபியுல், 37 பேரை பயங்கரவாதக் குழுவில் சேர்த்தார். உத்தரபிரதேசம் அல்லது கேரளாவில் உள்ள வனப்பகுதியில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்ட்தால், திட்டம் தவிடு பொடியானாது.  

இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டனர், 27 பேர் தேடப்படுகின்றனர்...

ரபியுல் கைது செய்யப்பட்ட பின்னர், அந்தப் பொறுப்பை நிறைவேற்ற மோர்ஷெத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவரும் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ கூறியது. இந்த பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 10 பேரை என்.ஐ.ஏ கைது செய்துவிட்டது.  27 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Also Read | பிரபல நடிகர்களின் மூதாதையர் வீடுகளை வாங்கும் பாகிஸ்தான் அரசின் நோக்கம் என்ன?

Trending News