3வருடங்களுக்குப்பிறகு கட்டாயமாக க்ளெய்ம் வழங்க வேண்டும்- ஐஆர்டிஏ(IRDAI) உத்தரவு

Last Updated : May 18, 2016, 04:32 PM IST
3வருடங்களுக்குப்பிறகு கட்டாயமாக க்ளெய்ம் வழங்க வேண்டும்- ஐஆர்டிஏ(IRDAI) உத்தரவு title=

இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு கட்டாயமாக க்ளெய்ம் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

 ஐஆர்டிஏ-வின் மாற்றங்களை பற்றி பார்ப்போம்:

இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து 3 ஆண்டுகளில் பாலிசிதாரர் க்ளெய்ம் கோரவில்லை என்றாலும் 3 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் கட்டாயமாக பாலிசிதாரருக்கு க்ளெய்ம் வழங்க வேண்டும்.

பாலிசிதாரர் பாலிசி எடுத்த இன்ஷூரன்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டார் எனில் பாலிசிதாரரின் குடும்பத்தினர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தினால் க்ளெய்ம் வழங்க வேண்டும். 

பாலிசிதாரர் மூன்று ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டார். ஆனாலும் வங்கிக் கணக்கிலிருந்து பிரீமியத்தொகை மாதந்தோறும் இசிஎஸ் மூலம் செலுத்தப்படுகிறது என்றால் 3 வருடத்திருக்கு பிறகு குடும்பத்தினர் க்ளெய்ம் கோரினால் க்ளெய்ம் தொகையை வழங்க வேண்டும்.

பாலிசிதாரர் பாலிசி எடுக்கும் போது உடலின் உள்ள நோய்பாதிப்புகள், புகை மற்றும் மதுப்பழக்கம் போன்றவற்றை பற்றி குறிப்பிடாமல் இருந்து அதை இன்ஷூரன்ஸ் நிறுவனம் முதல் 3 ஆண்டுகளுக்குள் கண்டுபிடித்தால் க்ளெய்ம் தொகை கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதேசமயம் பாலிசிதாரர் செலுத்திய முழு பிரீமியத்தொகையை அவரிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும்.

பாலிசிதாரர் பாலிசி எடுக்கும் போது க்ளெய்ம் தொகையைப் பெற வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் தன்னை பற்றிய தகவல்களை மறைத்து தவறான தகவல்கள் தந்து பாலிசி எடுத்தாலோ அல்லது இறந்த ஒருவரின் பெயரில் பாலிசி எடுப்பது போன்ற தவறுகளை பாலிசிதாரர் செய்திருந்து முதல் 3 ஆண்டுகளுக்குள் கண்டுபிடித்தால் க்ளெய்ம் தொகை மற்றும் கட்டிய பிரீமியம் தொகை இரண்டையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கத் தேவையில்லை.

ஹெல்த் டிக்ளரேஷன் இல்லாமல் முதல்முறை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்கப்பட்டு இருந்தால் பாலிசிதாரர் முதல் மூன்று ஆண்டுகளில் கேட்கும் க்ளெய்ம் தொகையை மறுக்கக்கூடாது. இப்படி பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஐஆர்டிஏ புதிதாகக் கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தத்தினால் பாலிசிதாரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். மேலும் மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இன்ஷூரன்ஸ் மீதுள்ள நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உண்மை.

Trending News