நேபாளத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம்… அணைக்கப்படும் இந்திய சேனல் சிக்னல்கள்…!!!

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அங்கு இந்திய செய்தி சேனல்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2020, 09:44 PM IST
  • நேபாளத்தில், டிடி நியூஸ் தவிர மற்ற இந்திய செய்தி சேனல்களின் சிக்னல்கள் அணைக்கப்பட்டுள்ளன
  • நேபாள வரைப்படத்தில் இந்திய பிரதேசத்தை சேர்ந்த மூன்று முக்கிய இடங்களை இணைத்து வெளியிடப்பட்டது
  • நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவை அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சரிதா கிரி எதிர்த்தார்
நேபாளத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம்… அணைக்கப்படும் இந்திய சேனல் சிக்னல்கள்…!!! title=

இமயமலை நாடான நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அங்குள்ள இந்திய செய்தி சேனல்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

DD செய்தி சேனல் தவிர, அனைத்து  இந்திய செய்தி சேனல்களும் நேபாளத்தில் அணைக்கப்பட்டன.

புதுடெல்லி (New Delhi): நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கான சிக்னல்கள் அணைக்கப்பட்டுள்ளதாக நேபாள கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குபவர்கள் வியாழக்கிழமை (ஜூலை 9) ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அரசு உத்தரவும் இல்லை எனவும் அவர்கள் கூறினர்.

ALSO READ | "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..." தாத்தா நினைவேந்தலில் தலை காட்டினார் கிம் ஜாங் உன்

 

இந்திய (India) செய்தி சேனல்களை அணைக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த, ​​நேபாள அரசின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் யூபராஜ் காதிவாடா (Dr Yubaraj Khatiwada), "நேபாளிகளின் இறையாண்மையையும் சுய மரியாதையையும் பாதிக்கும் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதில் அண்டை நாடுகளின் ஊடகங்களும் அடங்கும். நாங்கள் இது தொடர்பாக அரசியல் மற்றும் சட்டரீதியான தீர்வுகளையும் நாடலாம்" என தெரிவித்தார்

ALSO READ | உலகளாவிய மறுமலர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக இருக்கும்: PM Modi

இந்த  டிடி நியூஸ் தவிர மற்ற இந்திய செய்தி சேனல்களின் சிக்னல்கள் அணைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை நேபாள அரசு மேற்கொள்ளவில்லை. ஆனால், பாகிஸ்தான், சீன மற்றும் பிற செய்தி சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன என்று அவர் விடுத்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இமயமலை தேசமான நேபாளத்தில் நிலவும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் சமீபத்திய  சேனல்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் இந்த சமீபத்திய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

முன்னதாக, இந்திய நாட்டின் பகுதிகளை, தனது நாட்டின் பகுதியாக இணைத்து காட்டும் புதிய வரைபடத்தை வெளியிடுவதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கும் தனது கட்சியின் நிலைப்பாட்டை மீறிய நேபாள நாடாளுமன்ற உறுப்பினர் சரிதா கிரி, தனது நாடாளுமன்ற உறுப்பினரை இழந்தார் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

நேபாள வரைப்படத்தில் இந்திய பிரதேசத்தை சேர்ந்த மூன்று முக்கிய இடங்களை சேர்க்கும் வகையில் அதனை திருத்த ஒருமனதாக ஒப்புதல் அளிக்கும் தனது கட்சியின் முடிவை சரிதா கிரி எதிர்த்தார்.

Trending News