2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் ஆன்லைன் பதிவு இன்று பிற்பகல் 12 மணி முதல் துவங்கியது!
ஆண்டு தோறும் நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள MBBS, BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டி தேர்வை என்.டி.ஏ நடத்த உள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. www.ntaneet.nic.in, nta.ac.in என்ற இணையதளத்தில் இன்று முதல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம்.
நாடு முழுவதும் 2,697 பள்ளிகளில் நீட் தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு 2019 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி நாடு முழுவதும் நடக்க உள்ளது. அதன்பின் தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழ் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.