காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்!
பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்குடன் தொடர் மோதலில் ஈடுபட்டுள்ள அம்மாநில அமைச்சர் நவஜோத் சிங் சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் பிரியங்காவை புதுடில்லியில் வைத்து சந்தித்தார்.
பஞ்சாப்பில் அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கும் அமைச்சர் சித்துவிற்கும் இடையே, கட்சி விவகாரம் தொடர்பாக அடிக்கடி மோதல் நிலவிவருகிறது. இதனை தொடர்ந்து சித்து வகித்து வந்த சுற்றுலா மற்றும் கலாசார துறை பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டு,
Met the congress President, handed him my letter, appraised him of the situation ! pic.twitter.com/ZcLW0rr8r3
— Navjot Singh Sidhu (@sherryontopp) June 10, 2019
இதற்குப் பதிலாக மின்சாரத்துறை வழங்கப்பட்டது. ஏற்கனவே, சித்துவின் மனைவிக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட கோரப்பட்ட தொகுதி கிடைக்கவில்லை என்ற பிரச்னையும் எழுந்தது. தனது மனைவிக்கு மக்களவை தொகுதி ஒதுக்க பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் தான் முட்டுகட்டையாக இருப்பதாக சித்து பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை சித்து டெல்லியில் சந்தித்துள்ளார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பதில் சித்து ‘ராகுலிடம் கடிதம் ஒன்றை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிரச்னை குறித்தோ பேச்சுவார்த்தை குறித்தோ அதில் தகவல் ஏதுமில்லை.’
சித்துவின் இந்த திடீர் சந்திப்பின் மூலம் பஞ்சாப் அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.