17 தங்கப்பதக்கம் வென்ற சர்வதேச குத்துச்சண்டை வீரரின் தற்போதைய நிலை!

17 தங்கப்பதக்கம் பெற்று சர்வேதேச குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார் அரியானா மாநிலத்தில் சாலையோரும் குல்பி ஐஸ் விற்பனை செய்து வருகிறார். 

Last Updated : Oct 29, 2018, 10:04 AM IST
17 தங்கப்பதக்கம் வென்ற சர்வதேச குத்துச்சண்டை வீரரின் தற்போதைய நிலை! title=

17 தங்கப்பதக்கம் பெற்று சர்வேதேச குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார் அரியானா மாநிலத்தில் சாலையோரும் குல்பி ஐஸ் விற்பனை செய்து வருகிறார். 

 

 

 

அரியானா மாநிலம் பவானி பகுதியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான தினேஷ், குறுகிய காலத்தில் இந்தியாவுக்காக 17 தங்கப்பதக்கம் பெற்று தந்துள்ளார். இதை தவிர 1  வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளார். 

சாலை விபத்து காரணமாக விளையாட்டில் ஈடுபட முடியாமல் போன தினேஷின் சிகிச்சைக்காக அவரது தந்தை பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். தினேஷ் குமாரை சர்வதேச போட்டிகள் வரை கொண்டு செல்ல ஏற்கனவே அவரது தந்தை வாங்கிய கடன்கள் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்த நிலையில், சிகிச்சைக்காக மேலும் கடன் வாங்கியது வாழ்க்கையை நடத்தவே சிரமமாகிப்போனது.

கடன் நெருக்கடியால் தற்போது குத்துச்சண்டை வீரரான தினேஷ், அரியானா மாநிலத்தில் சைக்கிளில் குல்பி ஐஸ் விற்று வருகிறார். இது குறித்து தினேஷ் கூறுகையில், 

 

கடன்களை அடைப்பதற்காக ஐஸ் விற்று வருகிறேன். திடீரென நடந்த விபத்தால் என்னால் விளையாட முடியவில்லை. எனக்கு நிலையான வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். என்னால், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும்.

என கூறியுள்ளார்.

 

Trending News