ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியின் 59வது பதிப்பு நட்சத்திர இரவு. மணிப்பூரில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் , ராஜஸ்தானின் நந்தினி குப்தா ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023 என முடிசூட்டப்பட்டார். இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியின் 71வது பதிப்பில் அவர் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொள்வார்.
மணிப்பூரின் இம்பாலின் குமான் லாம்பக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழாவில், பல பிரபலங்கள் உட்பட சினிமாவில் ஜொலிக்குக்ம் நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொண்ட கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது.
மிஸ் இந்தியா 2023
ஃபெமினா மிஸ் இந்தியா 2023 கிரீடத்தை வென்ற ராஜஸ்தானின் நந்தினி குப்தா, கருப்பு நிற உடையில் நட்சத்திரமாக ஜொலித்தார். குறைந்தபட்ச நகைகள் மற்றும் ஸ்ட்ராப்பி ஹீல்ஸுடன், அழகான சிகையலங்காரமும், அவரின் அழகை மேம்படுத்திக் காட்டியது.
முடிசூட்டிய தருணம்!
பாரம்பரியத்தைப் பின்பற்றி,, 2022ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா சினி ஷெட்டி, நந்தினிக்கு அழகி கிரீடத்தைச் சூட்டினார். நடுவர் குழுவில் நேஹா தூபியா, நடன இயக்குனர் டெரன்ஸ் லூயிஸ், திரைப்பட இயக்குனர் ஹர்ஷவர்தன் குல்கர்னி, குத்துச்சண்டை வீராங்கனை லைஷ்ராம் சரிதா தேவி மற்றும் வடிவமைப்பாளர்கள் ராக்கி ஸ்டார் மற்றும் நம்ரதா ஜோஷிபுரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நந்தினி குப்தா யார்?
19 வயது இளம் அழகு ராணி ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்தவர். மாடல் மற்றும் ஒரு மாணவியான நந்தினி குப்தா, லாலா லஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். தனது வாழ்க்கையின் மிகப்பெரிய உத்வேகம் ரத்தன் டாடா என்று மிஸ் இந்தியா நந்தினி கூறுகிறார்.
மேலும் படிக்க | ராஷ்மிகாவின் புகைப்படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள் - ஏன் தெரியுமா?
மிஸ் இந்தியா ரன்னர் அப்
19 வயதான நந்தினி கிரீடத்தை வென்ற நிலையில், டெல்லியின் ஸ்ரேயா பூஞ்சா இரண்டாவது இடத்தையும், மணிப்பூரின் தோனோஜம் ஸ்ட்ரெலா லுவாங் 2 வது ரன்னர் அப் மகுடத்தையும் சூடினார்கள்.
நட்சத்திர இரவு
மிஸ் இந்தியா 2023 இன் பிரமாண்டமான இறுதி விழா நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக இருந்தது. மணிப்பூரின் உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டில் இருந்து பல ஏ-லிஸ்டர்கள் கலந்து கொண்டனர். நேஹா தூபியா, மணிேஷ் பால், கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் அந்த ஒளிரும் மாலையில் தோன்றிய நட்சத்திரங்கள்.
மேலும் படிக்க | Bizarre! கொரோனாவால் 'இறந்த' நபர்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ