பாராளுமன்றத்தில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்!!

பாராளுமன்றத்தில் இன்று முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Last Updated : Dec 28, 2017, 03:27 PM IST
பாராளுமன்றத்தில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்!! title=

பாராளுமன்றத்தில் இன்று முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆன ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முத்தலாக் முறையை பின்பற்றுவர். இதுகுறித்து இஸ்லாமிய பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.   

இந்நிலையில், முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் புதிய சட்டத்தை குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து செய்தது. இந்த முத்தலாக் முறையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய பெண்கள் காவல் துறையினரை சந்திக்க முடியாமல், தண்டனைக்கான விதிகள் இல்லாததால் தவறு செய்யும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. 

இப்பிரச்சனையை, தீர்க்கும் வகையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்தது.

இதையடுத்து பாராளுமன்றத்தில் இன்று முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார். 

முஸ்லிம் பெண்களின் திருமண உரிமையை பாது காக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்படு வதாகவும், இதை மீறுபவர் களுக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜா முத்தலாக் மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  மக்களவையில் கோரிக்கை வைத்தார். முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ், முஸ்லீம் லீக், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

Trending News