Mumbai Dust Storm: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இன்று புழுதி புயலுடன் கூடிய கனமழை பய்ததால் நகரமே கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிதீவிர காற்று வீசியதால் நகரம் முழுவதும் பல மரங்கள், பேனர்கள் உள்ளிட்டவை சாய்ந்துள்ளன. அந்த வகையில் மும்பையின் ஹட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இருந்த பிரம்மாண்ட பேனர் அதிதீவிர காற்றினால் அப்படியே சாய்ந்தது.
பேனர் சரிந்துவிழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் பெட்ரோல் பங்கிற்கு எதிரே இருந்த அந்த பிரம்மாண்ட பேனர் பின்பக்கமாக பெட்ரோல் போடப்பபடும் பகுதியை நோக்கி அப்படியே சாய்ந்தது தெரிந்தது. அந்த பேனருக்கு பின்புறம் இருந்த இரும்பு சட்டகம் பெட்ரோல் பங்கில் நின்றிருந்த சில கார்களின் மேற்கூரைகளை நொறுக்கியதும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.
Three people killed and 59 injured after a huge billboard fell in Mumbai.
The structure was located opposite a gas station. It collapsed during a dust storm. As a result, the metal frame pierced the roofs of several cars.
The state government has ordered an investigation into… pic.twitter.com/3SGRwdlCEn
அந்த பிரம்மாண்ட பேனருக்கு அடியில் ஏறத்தாழ 100 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 59 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையிடனர் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், அவர்கள் அந்த பிரம்மாண்ட பேனர்களுக்கு அடியில் சிக்கியிருப்பவர்களை மீட்டு வருவதாகவும் போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டிருப்பதாக மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் பெய்து வரும் கனமழையாலும், அதிவேக காற்றாலும் பல மரங்கள் சாய்ந்துள்ளன, கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் அலுவலகம் சென்றவர்கள், வெளியே சென்றவர்கள் வீடு திரும்புவதிலும் கடும் சிக்கல் எழுந்துள்ளது.
மதியப் பொழுதிலேயே நகர் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்ததால் வெளிச்சம் இன்றியே மும்பை நகரம் காட்சியளித்தது. மேலும் தொடர் மழையாலும், பலத்த காற்றுனாலும் மும்பையிலும், மும்பையை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டு இருட்டில் மூழ்கியுள்ளது.
கருமேகங்கள் சூழ்ந்ததாலும், மோசமான வானிலையாலும் புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோவின் சில லைன்கள், விமான சேவைகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றின் காரணமாக தானே மற்றும் முலுண்ட் இடையே உள்ள மேல்நிலை உபகரண கம்பம் சேதம் அடைந்ததால் புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆரே மற்றும் அந்தேரி கிழக்கு பகுதிகளுக்கு இடையே விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததால் மெட்ரோ ரயில் ஓடவில்லை. புறநகர் ரயில்கள் மெயின் லைனில் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மும்பையின் தானே, பால்கர் மற்றும் மும்பை நகர் பகுதியில் இடியுடன் கூடிய மின்னலுடன் மிதமானது முதல் தீவிரமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து "நவ்காஸ்ட் எச்சரிக்கை" விடுத்துள்ளது.
சரியான பருவமழை பெய்யாததால் மும்பை மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வந்த நிலையில், கோடை வெயிலால் மிகுந்த வெப்ப பாதிப்புகளையும் சந்தித்தனர். தற்போது இந்த புழுதிப் புயல் மற்றும் கனமழையால் வெயிலில் இருந்து சிறிது ஓய்வு கிடைத்துள்ளது எனலாம்.
மேலும் படிக்க | சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ