மாநிலங்களவையில் MP-க்கள் இனி 22 மொழிகளில் பேசலாம்!

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும் இனி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பேச வழிவகை செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Jul 11, 2018, 10:09 PM IST
மாநிலங்களவையில் MP-க்கள் இனி 22 மொழிகளில் பேசலாம்! title=

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும் இனி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பேச வழிவகை செய்யப்பட்டுள்ளது!

வரும் 18-ம் தேதி பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் இப்போது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏற்றவாறு அனைத்து மொழிகளுக்கு பிரத்யேக மொழிபெயர்ப்பாளர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.  

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஒடியா, அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, மராத்தி, பஞ்சாபி, உருது ஆகிய 12 மொழிகளை ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் உள்ளது. 

இந்த மொழிகளை தாய் மொழியாக கொண்ட உறுப்பினர்கள், தங்கள் கருத்துகளை தங்கு தடையின்றி முன்வைத்து வருகிறார்கள். எனினும் இதர 10 மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இதனை களையும் வகையில் தற்போது டோங்ரி, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகிய 5 மொழிகளையும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதி  செய்யப்பட்டுள்ளது. 

இதேபோன்று,  போடோ, மைதிலி, மராத்தி, நேபாளி, மணிப்பூரி ஆகிய 5 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் வரும் 18-ஆம் தேதி துவங்கவுள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் பேசுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, தமிழக மாநிலங்களவை உறுப்பினர் அவையில் தமிழில் பேசுகையில், அவர் பேசும்போதே அதனை மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொண்டிருப்பார். இந்த ஆங்கில உரையை, மற்றொரு மொழிபெயர்ப்பாளர் இந்தியில் மொழிபெயர்த்து கூறுவார். இவ்வாறு, உறுப்பினர் ஒருவரின் தாய்மொழி பேச்சு, ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கத்து.

Trending News