மத்திய பிரதேச மாநிலம், ஜாப்தி ரயில் நிலையம் அருகே போபால் உஜ்ஜைனி பயணிகள் ரெயில் சென்றபோது ரயிலின் பொதுப்பெட்டியில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் ரயில்பெட்டியின் கூரை வெடித்து சிதறியது.
இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர் காவல் துறையினர். பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று மாலை தீவிரவாதிகள் திடீரென காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் வீடு ஒன்றில் பதுங்கி இருந்தபடி இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
தீவிரவாதி சைபுல் பதுங்கியுள்ள அந்த வீட்டின் கதவை போலீஸ் கமாண்டோக்கள் தட்டினர். ஆனால் கதவைத் தட்டுவது போலீஸ் படைதான் என அவர் மோப்பம் பிடித்துக்கொண்டு, அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். சரண் அடைய மறுத்து போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாதி சைபுல் பல மணி நேர போராட்டத்துக்கு பின்பு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.