EVM எந்திரங்களில் எந்த குறைபாடும் இல்லை -ரவிசங்கர் பிரசாத்!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி செய்ததில் குறைபாடுகள் ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Last Updated : Jun 28, 2019, 06:53 AM IST
EVM எந்திரங்களில் எந்த குறைபாடும் இல்லை -ரவிசங்கர் பிரசாத்! title=

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி செய்ததில் குறைபாடுகள் ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கேள்வி எழுப்புகையில், சமீபத்தில் நடைப்பெற்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடு குறித்தும், வாக்கு எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் மற்றும் விவிபாட் கருவியில் உள்ள சீட்டுகளுக்கும் வித்தியாசம் இருந்ததாகவும் பல புகார்கள் வந்ததே? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில்., “இது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி தொடர்பான கேள்வி, அதன் செயல்பாடு பற்றி அல்ல. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி செய்ததில் எந்த குறைபாடும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஏதாவது குறிப்பிட்ட புகார் இருந்தால், நான் அதற்கு தேர்தல் ஆணையத்திடன் இருந்து தகவல் கேட்டு சொல்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் விவிபாட் கருவிகளின் சீட்டுகள் மற்றும் ஓட்டுகள் எண்ணிக்கை தொடர்பாக புகார்கள் ஏதும் எழவில்லை. இதுபற்றி புகார் வந்த சில இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த இடத்திலேயே வேட்பாளர்கள் முன்னிலையில் அந்த தவறுகளை கண்காணித்து சரிசெய்தனர் எனவும் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக ‘காங்கிரஸ் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது என்பது ஒரு ட்ரண்ட் ஆகி விட்டது என என பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மின்னணு ஓட்டு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு நோய் ஆகும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்ற தேர்தல் கமிஷனின் சவாலை ஏற்க மறுக்கிறது காங்கிரஸ். தேர்தல் செயல்முறை கணிசமாக முன்னேறியுள்ளது. மேம்பாடுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. முதலில் தேர்தல் நடக்கும் போது ஒரு தலைப்பு இருந்தது, தேர்தலின் போது எவ்வளவு வன்முறை நடந்தது என்று, ஆனால் இன்றைய தலைப்பு என்னவென்றால், முந்தையதை தேர்தலை விட இந்த தேர்தலில் எவ்வளவு வாக்களிக்கப்பட்டு என்ற ஒப்பிடும் தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் எங்கள் வெற்றியும் அவர்களின் தோல்வியையும் காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை எனவும் கடுமையாக சாடினார்.

Trending News