மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று..!

மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

Last Updated : Jul 25, 2020, 01:00 PM IST
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று..! title=

மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலமாக நடத்த உள்ளேன் என முதல்வர் தெரிவித்தார். கொரோனா உறுதியான நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரையில் 8,49,431 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48,916 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 31,358 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் இதுவரையில் 25,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 17,359 பேர் குணமடைந்துள்ளனர். 780 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு முழு முயற்சியுடன் ஈடுபட்டு வரும் நிலையில், முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

ALSO READ | வேலை செய்யும் பெண்களே... 50, 30, 20 சூத்திரத்தை பின்பற்றினால் நீங்கள் தான் கோடீஸ்வரி... 

இதைத் தொடர்ந்து, முதலமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Trending News