வட இந்தியாவில் பொழிந்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய இரயில்வே தெரிவித்துள்ளது!
இந்த அறிவிப்பின்படி டிசம்பர் 13,2018 முதல் பிப்ரவரி 15, 2019 ஆகிய நாட்களுக்கு இடையே இயக்கப்படவிருந்த 130 ரயில்கள் பனிப்பொழிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்ட்ட பெரும்பான்மை ரயில்கள் வடக்கு ரயில்வேக்கு உட்பட்டது எனவும், 21 ரயில்கள் வடக்கு மத்திய சராங்கத்திற்கு உட்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஞ்சலூர், ஜலந்தர் சிட்டி, அம்ரித்ஸர், பதான்கோட், லக்னோ, கான்பூர், ஜுன்பூர், பிரயாக், பாராபங்கி, பைசாபாத், டெல்லி, ராய் பரேலி, கஜியாபாத், மீரட், ரோஹ்தக், புது தில்லி, பல்வால் மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட நகரங்களிலிருந்து இயக்கப்படும் பெரும்பான்மை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்...