Monkeypox in India: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி

Monkeypox in India: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் துபாய் நாட்டிலிருந்து திரும்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 18, 2022, 04:27 PM IST
  • கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி.
  • இந்தியாவில் முதல் குரங்கு அம்மை தொற்றும் கேரளாவில் உருதியானது.
  • மாநில சுகாதார அமைச்சகத்தால் தகவல் உறுதி செய்யப்பட்டது.
Monkeypox in India: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி title=

குரங்கு அம்மையின் முதல் நோயாளி இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்ஹில் இருந்து திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை உறுதி செய்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். 

தற்போது கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் துபாய் நாட்டிலிருந்து திரும்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  

மேலும் படிக்க | கேரளாவில் குரங்கு அம்மை - தடுப்பூசியும் சிகிச்சை முறையும்!

இதற்கிடையில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மங்கி பாக்ஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. 

குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்கும் நடைமுறை தமிழகத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு பதிவாகவில்லை என்றபோதிலும், தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி இரு நாட்களுக்கு முன்னர் "குரங்கம்மை" பரவல் தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிபார்த்தார். 

குரங்கு அம்மை: முதன்முறையாக எப்போது வந்தது?

குரங்கு அம்மை நோய் மனிதர்களிடம் முதன்முதலில் 1970 ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் கண்டறியப்பட்டது. அங்கு பெரியம்மை 1968 ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்ட நிலையில், 1970 ஆம் ஆண்டு குரங்கு அம்மை பரவத் தொடங்கியது. கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க | இந்தியாவில் மங்கி பாக்ஸ்: அறிகுறிகள் என்ன? இதற்கு சிகிச்சை உள்ளதா? விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News