மாயமான சுகாய்-30 போர் விமானத்தின் பாகங்கள் கிடைத்தன

Last Updated : May 26, 2017, 01:18 PM IST
மாயமான சுகாய்-30 போர் விமானத்தின் பாகங்கள் கிடைத்தன title=

கடந்த 23-ம் தேதி மாயமான சுகாய்-30 போர் விமானத்தின் பாகங்கள்  சீன எல்லை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 23-ம் தேதி சுமார் 9.30 மணி அளவில் அசாம் மாநிலம் திஸ்பூரில் இருந்து 2 விமானிகளுடன் பயிற்சிக்கு புறப்பட்ட விமானம் 60 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது ரேடார் சிக்னலில் இருந்து மறைந்தது. இந்த விமானம் சீன எல்லைப் பகுதியில் மாயமானது.

விமானம் மாயமானதால் மிகுந்த பரபரபப்பு ஏற்பட்டது. மாயமான விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு காரணமாக என குறித்து விமானப்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு விமானத்தின் பாகங்கள் சீன எல்லை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேஸ்பூர் பகுதியில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளன.

Trending News