புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சம், அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், அனைத்து நிலுவைத் தொகைகளையும் விரைவில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் (AIR INDIA) நிலுவைத் தொகையை செலுத்தவும், மறு உத்தரவு வரும் வரை விமான நிறுவனத்திடமிருந்து வாங்கும் அனைத்து பயணசீட்டுகளும் ரொக்கமாக கொடுத்து வாங்க வேண்டும் என்றும் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் தேசிய விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவில் இருந்த பங்குகளை சமீபத்தில் அரசாங்கம் விலக்கிக் கொண்டது. ஏஎன்ஐ செய்தி நிறுவன செய்தியின்படி, ஏர் இந்தியா விமான டிக்கெட் வாங்குவதற்கு இதுவரை மத்திய அரசின் அமைச்சகங்களுக்கும், பல்வேறு துறைகளுக்கும், கொடுக்கப்பட்ட கடன் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
Finance Ministry directs all ministries & departments of Central Govt to clear dues of Air India & purchase tickets from the airline in cash; says Air India, in which Govt recently disinvested its stake, has stopped extending credit facility on account of air ticket purchase pic.twitter.com/bCMTVOG1zm
— ANI (@ANI) October 27, 2021
ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்குகிறது
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, அனைத்து நிலுவைத் தொகைகளையும் விரைவில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் ஏல விற்பனையில் வாங்கியது. தற்போது விமான நிறுவனத்தை ஒப்படைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. நிறுவன பறிமாற்ற செயல்முறை டிசம்பர் 2021 க்குள் முடிவடைந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
Also Read | "வெல்கம் பேக், ஏர் இந்தியா" ரத்தன் டாடா ட்வீட்
முன்னதாக, மத்திய அரசு 2009 ஜூலை 13 தேதியிட்ட உத்தரவில், மத்திய அரசுப் பணியாளர்களின் LTC உட்பட அனைத்து விமானப் பயணங்களுக்கும் (உள்நாட்டு மற்றும் சர்வதேச) விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை இந்திய அரசு கொடுப்பதால், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவிடமிருந்து தான் விமான பயணச் சீட்டுகளை வாங்க வேண்டும் எனக் கூறியது. இப்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை திரும்பப் பெற்ற பிறகு, அமைச்சகங்களுக்கு அரசாங்கம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தற்போது மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அதிகாரிகள், அரசின் இந்த அறிவுறுத்தலை சக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிதிச் செயலாளர் மற்றும் செயலாளர் (செலவு) அனுமதிக்குப் பிறகு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் ரூ.18000 கோடிக்கு ஏல விற்பனையில் வாங்கியுள்ளது. ஏர் இந்தியாவின் அதிகாரம், 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா குழுமத்திடம் செல்லவிருக்கிறது.
READ ALSO | தனியார் மயமானது ஏர் இந்தியா... 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR