மத்திய அமைச்சரவையில் நேற்று 19 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களையும் செய்துள்ளார்.
மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்து ஸ்மிருதி இரானி, ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று காலை கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜவடேகர் மனித வள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சராகிறார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். வெங்கய்ய நாயுடு தற்போது தகவல் ஒலி பரப்புத் துறையுடன் ஏற்கெனவே கவனித்து வந்த நகர்ப்புற வளர்ச்சித் துறையையும் கவனிப்பார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் புதிய அமைச்சராக அனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். தொலைத்தொடர்பு துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் வசம் கூடுதல் பொறுப்பாக சட்டத் துறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை பதவியேற்ற 19 புதிய அமைச்சர்களில் ஒருவ ரான விஜய் கோயல் வசம் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அளிக்கப்பட்டுள்ளது. இத்துறையை இதற்கு முன்பு சர்வானந்த சோனோவால் கவனித்து வந்தார். அவர் அசாம் முதல்வராக பதவியேற்பதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நிதித் துறையில் இருந்து விமானப் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஸ்மிருதி இரானி, முக்கியத்துவம் குறைந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளா