Post Office: மாதம் நூறு ரூபாய் சேமிப்பு! சிறு துளி பெருவெள்ளம்

வெறும் ₹ 100 இல் முதலீடு செய்யத் தொடங்கும் விருப்பம் தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் உள்ளது, இது சிறுதுளி பெருவெள்ளமென மிகப் பெரிய அளவு சேமிப்புக்கு அடிப்படையாக இருக்கும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 9, 2022, 08:19 PM IST
  • மாதம் நூறு ரூபாய் சேமித்தால் சூப்பர் முதிர்வுத் தொகை
  • அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம்
  • ஐந்தாண்டு திட்டம்
Post Office: மாதம் நூறு ரூபாய் சேமிப்பு! சிறு துளி பெருவெள்ளம் title=

வெறும் ₹ 100 இல் முதலீடு செய்யத் தொடங்கும் விருப்பம் தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் உள்ளது, இது சிறுதுளி பெருவெள்ளமென மிகப் பெரிய அளவு சேமிப்புக்கு அடிப்படையாக இருக்கும். 

தபால் அலுவலகம் தொடர் வைப்பு கணக்கு என்பது தவணைகளில் சிறிய அளவிலான தொகையுடன் சேமிக்கும் சிறப்பான திட்டம், நல்ல வட்டி விகிதம் மற்றும் அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய திட்டமாகும். அஞ்சல் அலுவலகத்தில் தொடர் வைப்பு கணக்கு ஐந்து ஆண்டுகளுக்கு  திறக்கப்படுகிறது.

மிகக் குறைந்த பணத்தில் ஒருவர் போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்டில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இதில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு பாதுகாப்பு, உத்தரவாதம் மற்றும் லாபமும் நன்றாக இருக்கும்.  

மேலும் படிக்க | வெறும் ரூ.821-க்கு அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் சேல் அதிரடி

குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்யலாம்

அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம். இதை விட அதிகமான தொகையை 10 ரூபாயின் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச வைப்புத் தொகைக்கு வரம்பு இல்லை. 

 தொடர் வைப்பு கணக்கு ஐந்து ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் திறக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் (வருடாந்திர விகிதத்தில்) வட்டி கணக்கிடப்படுகிறது, மேலும் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் உங்கள் கணக்கில் கூட்டு வட்டி சேர்க்கப்படும்.

money
வட்டி எவ்வளவு 
தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, RD (Post Office Recurring Deposit Scheme) திட்டத்திற்கு தற்போது 5.8 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்த புதிய விகிதம் ஏப்ரல் 1, 2020 முதல் பொருந்தும். 

இது ஒரு சிறு சேமிப்பு திட்டம். இந்திய அரசு தனது அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் அறிவிக்கிறது.

RD கணக்கு திறப்பு விதிகள்
யார் வேண்டுமானாலும் எத்தனை ஆர்டி கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். அதிகபட்ச கணக்குகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. இந்த சேமிப்புக் கணக்கை தனித்தனியாக மட்டுமே திறக்க முடியும், இந்து கூட்டுக் குடும்பம் (HUF) அல்லது அமைப்பின் பெயரில் திறக்க முடியாது. 

வயது வந்த இரண்டு நபர்கள் சேர்ந்து கூட்டு RD கணக்கையும் திறக்கலாம். ஏற்கனவே தொடங்கப்பட்ட தனிநபர் RD கணக்கை எந்த நேரத்திலும் கூட்டு கணக்காக மாற்றலாம்.ஏற்கனவே திறந்திருக்கும் கூட்டு RD கணக்கை எந்த நேரத்திலும் தனிப்பட்ட RD கணக்காக மாற்றலாம்.

மேலும் படிக்க | அறிமுகமானது MediaTek Dimensity 1300! OnePlus Nord 2T உடன் வெளியாகும்

RD கணக்கை மூடலாம்
அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்தின் தவணைத் தொகையை உரிய தேதிக்குள் டெபாசிட் செய்யவில்லை என்றால், தாமதமான தவணையுடன் சேர்த்து, ஒவ்வொரு மாதமும் தனித்தனியாக ஒரு சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும்.

மேலும், தொடர்ந்து நான்கு தவணைகளை டெபாசிட் செய்யவில்லை என்றால் கணக்கு மூடப்படும். 

கணக்கு மூடப்பட்ட பிறகும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக தலைமை தபால் நிலையத்தில் விண்ணப்பித்து, புதிய தவணையுடன் முந்தைய தவணைகள் மற்றும் அபராதத் தொகை அனைத்தையும் டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | ரூ. 8,000-க்கும் குறைவாக கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News