BSP கட்சியின் முக்கியமான பதவியில் மாயாவதியின் உறவினர்கள்?

பகுஜன் சமாஜ் கட்சி தேசிய துணை தலைவராக மாயாவதியின் சகோதரரும் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவரது மருமகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்!

Last Updated : Jun 23, 2019, 10:43 PM IST
BSP கட்சியின் முக்கியமான பதவியில் மாயாவதியின் உறவினர்கள்? title=

பகுஜன் சமாஜ் கட்சி தேசிய துணை தலைவராக மாயாவதியின் சகோதரரும் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவரது மருமகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்!

உத்தரபிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தலைமையில் அக்கட்சியின் மேலிட ஆலோசனை கூட்டம்  இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
 
பின்னர், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய துணை தலைவராக மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவரது மருமகன் ஆகாஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டார் எனவும் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக பாராளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் குழு தலைவராக டனிஷ் அலி, கொறடாவாக கிரிஷ் சந்திரா ஆகியோரையும் நியமித்து மாயாவதி உத்தரவிட்டார். 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மக்களை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள டனிஷ் அலி, தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாகவே பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் அமோரா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதேவேளையில் 24-வயது இளைஞரான ஆகாஷ் ஆனந்த் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 12 சட்மன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது மாயாவதி எடுத்துள்ள அதிரடி முடிவுகள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

Trending News