Ola: 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் ஓலா நிறுவனம்; காரணம் என்ன

ஓலா நிறுவனம், செலவைக் குறைப்பதை நோக்கில், தங்களிடம் பணியாற்றும் 1,100-க்கும் மேற்பட்ட பணியாளர்களில், சுமார் 500 முதல் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2022, 03:44 PM IST
  • ஓலா ஸ்கூட்டரின் விற்பனையும் சர்நிதுள்ளது.
  • தீ விபத்துகள் ஏராளம் ஏற்பட்ட நிலையில், மின்சார வாகனம் பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது.
  • ஒட்டுமொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவுகளில் ஓலா எலக்ட்ரிக் நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது.
Ola: 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் ஓலா நிறுவனம்; காரணம் என்ன title=

கடந்த சில காலங்களாக செலவை குறைப்பது உள்பட ஒரு சில காரணங்களுக்காக சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஓலா நிறுவனமும் சுமார் 400 முதல் 500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ola's Talent Acquisition அமைப்பின் தலைவரும், Ola குழும நிறுவனங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பாளருமான ஷிகர் சூட் தனது ராஜினாமாவை சம்பித்தததை தொடர்ந்து பணி நீக்கங்கள் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓலா நிறுவனம், மிகச் சவாலான நிதி நிலைமையை எதிர் கொண்டு வரும் நிலையில், செலவைக் குறைப்பதை நோக்கில், தங்களிடம் பணியாற்றும் 1,100-க்கும் மேற்பட்ட பணியாளர்களில், சுமார் 500 முதல் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இதன் காரணமாக சரியாக பணி செய்யாத ஊழியர்கள் யார் யார் என்பதை கண்டறியும் படி , நிறுவனத்தில் அனைத்து பிரிவின் மேலாளர்களுக்கு ஓலா தலைமை அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் ஒரு சில மாதங்களில் வேலை நீக்கம் செய்யப்படும் எனவும், சரியான பணியாற்றாத ஊழியர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ITR Filing முக்கிய அப்டேட்: இந்த தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அதிக அபராதம்

முன்னதாக, ஓலா நிறுவனம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய பழைய கார்களை வாங்கி விற்கும் ஓலா கார்ஸ் (Ola Cars) நிறுவனத்தையும், ஆன்லைன் டெலிவரியான Quick Dash வர்த்தக நிறுவனத்தையும் மூடியது குறிப்பிடத்தக்கது.

8 மாதங்களுக்கு முன்பு ஓலா கார்ஸ் தொடங்கிய நிலையில், 100 நகரங்களில் சுமார் 300 மையங்களைத் திறக்க திட்டம் இயற்றப்பட்டு இருந்தது. இதற்காக சுமார் 10,000 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது இந்த ஊழியர்கள் அனைவரும் பணி இழந்த நிலையில், ஓலா ஸ்கூட்டர்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறப்படுகிறது. 

எனினும், ஓலா ஸ்கூட்டரின் விற்பனையும் சர்நிதுள்ளது. ஒட்டுமொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பதிவுகளில் ஓலா எலக்ட்ரிக் நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. ஜூன் மாதத்தில் 5869 ஓலா இ-ஸ்கூட்டர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி தீ விபத்துகள் மக்கள் மத்தியில் அச்சத்தை எழுப்பியுள்ளதால், விற்பனைச் சரிந்துள்ளது. பல இ-ஸ்கூட்டர்களை ஓலா விற்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம், எலக்ட்ரிக் வாகன தீ பற்றிய அதிகரித்து வரும் கவலைகள் ஆகும். கடந்த சில மாதங்களாக, தீ விபத்துகள் ஏராளம் ஏற்பட்ட நிலையில், மின்சார வாகனம் பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. 

இந்த மனநிலையை மாற்ற சிறிது நேரம் ஆகலாம் ஆனால் பாதுகாப்பானது என்ற உறுதிபடுத்தினால் இரு சக்கர வாகன விற்பனை நல்ல வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி தீ பிடிப்பது குறித்த அரசாங்க விசாரணையை Ola நிறுவனம் எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News