ராகுலின் செய்கையால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்: மாண்டேங்சிங்!

ராகுலின் நெருக்குதலால் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்!!

Last Updated : Feb 17, 2020, 10:12 AM IST
ராகுலின் செய்கையால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்: மாண்டேங்சிங்! title=

ராகுலின் நெருக்குதலால் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்!!

டெல்லி: காங்கிரஸ் ஆட்சியின் போது செய்தியாளர் சந்திப்பில் அவசர சட்டத்தின் நகலை கிழித்து எறிந்த ராகுலின் செயலால் 2013 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எண்ணியதாக மாண்டேங்சிங் அலுவாலியா கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த அலுவாலியா, "Backstage: The Story behind India's High Growth Years" என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்பிக்கள், எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி தண்டனையை எதிர்த்து எம்பிக்களும் எம்.எல்.ஏக்களும் மேல்முறையீடு செய்து, தண்டனைக்கு தடை பெற்றால் அவர்கள் சம்பளம் பெறாமல், வாக்களிக்கும் உரிமை இல்லாமல் பதவியில் நீடிக்க முடியும் என்ற அவசர சட்டத்தை கொண்டுவந்தது. 

இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று அப்போதை காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல், டில்லியில் செய்தியாளர் சந்திப்பின் போது அவசர சட்ட நகலை கிறித்து எறிந்தார். அந்த சமயத்தில் இது பெரு சர்ச்சையானது. இது நடைபெற்ற போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார். நானும் அவருடன் சென்றிருந்தேன். நாங்கள் நியூயார்க்கில் இருந்த சமயத்தில் எனது சகோதரும் ஓய்வுபெற்ற IAS அதிகாரியுமான சஞ்சீவ், பிரதமரை கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதை இமெயில் மூலம் எனக்கு அனுப்பி இருந்தார்.

அதை நான் மன்மோகன் சிங்கிடம் காட்டினேன். அதை அமைதியாக படித்த அவர், நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா என கேட்டார். இப்படி ஒரு பிரச்னையான சூழலில் நீங்கள் ராஜினாமா செய்வது சரியாக இருக்கும் என நான் கருதவில்லை என நேர்மையாக ஆலோசனை வழங்கினேன். இவ்வாறு அலுவாலியா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ராகுலால் மன்மோகன் சிங் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், ராஜினாமா செய்யும் முடிவில் இருந்ததாகவும் அலுவாலியாக எழுதி உள்ளது அரசியலிலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

Trending News