Manipur Video Issue: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் பெண்களை நிர்வாணமாக சாலையில் நடக்கவைத்து, வன்முறையில் ஈடுபட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெலியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன், ஆளும் அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆகியோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.
குகி-ஜோ சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கும்பல், சாலையில் வன்முறையில் ஈடுபட்ட வகையில் செல்லுவது அந்த அச்சுறுத்தும் வீடியோவில் தெரிகிறது. மேலும் ஒரு பெண் கொடூரமாக அதே கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி செய்தியால் கொடூர வன்முறை
இருப்பினும், 2 பெண்கள் மீதான வன்முறை மற்றும் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இந்த வன்முறை சம்பவத்திற்கு வழிவகுத்தது ஒரு போலி செய்தி என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவம், மணிப்பூரில் நடைபெற்றதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக போலியான செய்திகள் அங்கு பரப்பப்பட்டன. குறிப்பாக, பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட ஒரு பெண்ணின் படம் மணிப்பூர் பெண்ணின் புகைப்படம் தவறாக வெளியாகியுள்ளது. ஆனால், அந்த பாலியல் வன்புணர்வு சம்பவம்டெல்லியில் நடந்தது பின்னர் தெரியவந்தது.
மேலும் படிக்க | கொடூரம்! மணிப்பூரில் நிர்வாணமாக நடுரோட்டில் கொண்டு செல்லப்பட்ட 2 பெண்கள்!
இந்த போலி செய்தியே, காங்போக்பியில் ஐந்து பேரைக் கடத்த கும்பலைத் தூண்டியது. வடகிழக்கு மாநிலத்தில் வன்முறை வெடித்த ஒரு நாளுக்குப் பிறகு, அதாவது மே 4ஆம் தேதி அன்று காங்போக்பி மாவட்டத்தில் இரு பெண்கள் மீதான வன்முறை சம்பவம் நடந்தது. ஏறத்தாழ 77 நாள்களுக்கு பின், அந்த வன்முறை தொடர்பான வீடியோக்கள் நேற்று முன்தினம் (ஜூலை 19) சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வன்முறையின் பின்னணி
காவல்துறையினரின் புகாரின்படி, 800 முதல் 1,000 பேர் வரை, அதிநவீன ஆயுதங்களுடன், பி. பைனோம் கிராமத்திற்குள் நுழைந்து, பரவலான தாக்குதல்களையும், கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலவரத்தின் போது வீடுகள் எரிக்கப்பட்டன மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் மெய்டே குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.
தாக்குதலின் போது, இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஐந்து கிராமவாசிகள், அருகிலுள்ள காட்டில் பாதுகாப்பாக உயிர் தப்பினர். பின்னர் அவர்களை நோங்போக் செக்மாய் போலீஸ் குழு மீட்டது, ஆனால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது, கும்பல் அவர்களை கடத்திச் சென்று, மேலும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது..
இரக்கமற்ற கும்பலால் உடனடியாக ஒருவர் கொல்லப்பட்டார். காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, மூன்று பெண்களும் நிர்வாணமாக நிற்க கட்டாயப்படுத்தப்பட்டனர். 21 வயதுடைய பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். அவரது 19 வயதான சகோதரர் அதனை தடுக்க முயன்றபோது, கும்பலால் அவர் கொல்லப்பட்டார்.
நான்கு பேர் கைது
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நேற்று காலை கைது செய்யப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களின் வீடியோ வைரலானதை அடுத்து, 32 வயதான ஹுய்ரெம் ஹெராதாஸ் சிங் என்ற நபர், தௌபல் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை இழுத்துச் சென்ற, பச்சை நிற டி-சர்ட் அணிந்த நபர் தான் ஹெராதாஸ் சிங். அவர் உள்பட இன்னும் 3 பேர் என இதுவரை நான்கு பேர் கைதாகியுள்ளனர் என மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் நேற்றிரவு தெரிவித்தார்.
மரண தண்டனை?
மே 18 அன்று ஒரு புகார் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது ஜூன் 21ஆம் தேதி அன்று முதல் தகவல் அறிக்கையாக ஆக மாற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரேன் சிங் கூறினார்.
மேலும் படிக்க | மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே வெட்ககேடானது: பிரதமர் மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ