Manipur News Update In Tamil: மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக பற்றி எரிந்துவரும் இனக்கலவரத்தை முதலமைச்சர் என். பைரன் சிங் கையாண்டது குறித்து விமர்சனத்திற்கு உள்ளாகி, இன்று ராஜினாமா செய்யும் நிலையில் இருந்தார், ஆனால், அவர் தற்போது ராஜினாமா செய்யிவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்களின் அழுத்தத்தால் அவர் தனது மனதை மாற்றிக் கொண்டதாக மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார். அதாவது, பைரேன் சிங் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டார் என்றும் ஆனால் முதலமைச்சர் இல்லத்திற்கு வெளியே ஆதரவு அளித்து பெரும் மக்கள் கூட்டம் திரண்டதால், அவர் ஆளுநர் மாளிகை செல்லவில்லை என அந்த அமைச்சர் கூறினார்.
ராஜினாமா கடிதம் கிழிப்பு
அவர் ராஜினாமா செய்வதை விரும்பவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான பெண்கள் பைரன் சிங்கின் வீட்டின் அருகே கூடி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது ராஜினாமா கடிதத்துடன் இரண்டு அமைச்சர்கள் அவரது இல்லத்தில் இருந்து வெளியே வந்தபோது அவரது ராஜினாமா கடிதத்தின் நகல் கிழிக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் பைரன் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர்,"இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மணிப்பூர் கலவரத்தில் தடை செய்யப்பட்ட சீன பைக்குகள்... இந்தியாவிற்கு வந்தது எப்படி!
இங்கு அரசியல் வேண்டாம்
முன்னதாக, இரண்டு நாள் பயணமாக வடகிழக்கு மாநிலத்திற்கு வந்துள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒத்த எண்ணம் கொண்ட கட்சித் தலைவர்கள், ஐக்கிய நாகா கவுன்சில் (யுஎன்சி) தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்களை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் சந்திக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இங்குள்ள அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறினார். "நான் இங்கு அரசியல் கருத்து எதுவும் கூற வரவில்லை. இந்த விவகாரங்கள் குறித்து இங்கு கருத்து கூற மாட்டேன். விரைவில் இங்கு அமைதி திரும்ப வேண்டும்" என்று அவர் கூறினார்.
அமைதி தேவை
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது மனம் உடைந்ததாக ராகுல் காந்தி கூறினார். இதுகுறித்து அவர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், "மணிப்பூரில் வன்முறையால் அன்புக்குரியவர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பது மற்றும் கேட்பது மனவேதனை அளிக்கிறது. ஒவ்வொரு சகோதரரின் முகத்திலும் உதவிக்கான கூக்குரலை பார்க்க முடிகிறது.
மணிப்பூருக்கு இப்போது மிக முக்கியமான விஷயம் அமைதி, நமது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது. எங்கள் முயற்சிகள் அனைத்தும் அந்த இலக்கை நோக்கி ஒன்றுபட வேண்டும்." மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
தொடரும் பதற்றம்
மணிப்பூரின் பதற்றமான காங்போக்பி மாவட்டத்தில் ஹராதெல் கிராமத்தில் ஆயுதமேந்திய கலவரக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக, நிலைமை மோசமடைவதை தடுக்க அருகில் நிலைகொண்டிருந்த துருப்புக்களைத் திரட்டியதாக ராணுவம் கூறியது.
இராணுவ அறிக்கையின்படி, ஆயுதமேந்திய கும்பல் தாக்கியதில் சுட்டுக் கொல்லப்பட்ட தலைமை கான்ஸ்டபிள் லெங்லாம் டிம்ங்கல் உட்பட மோதலுக்குப் பிறகு சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மணிப்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 17 ஆயுதங்கள், 12 தோட்டாக்கள் மற்றும் 10 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. காக்சிங் மாவட்டத்தில் இருந்து எட்டு ஆயுதங்கள், இரண்டு வெடிமருந்துகள் மற்றும் இரண்டு குண்டுகள் கூட்டுக் குழுவால் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ