காங்கிரசுடன் இணைந்து போட்டியிட தயார்; 2024 மக்களவை தேர்தலை குறிவைக்கும் மம்தா பானர்ஜி

காங்கிரஸோடு இணைந்து செயல்படத் தயார். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு குடையின்கீழ் திரண்டு 2024 தேர்தலை எதிர்கொள்வோம்- மமதா பானர்ஜி.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 11, 2022, 04:27 PM IST
  • எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு குடையின்கீழ் திரண்டு 2024 தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
  • எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் -மம்தா.
  • 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம், நேர்மறையாக சிந்தியுங்கள்.
காங்கிரசுடன் இணைந்து போட்டியிட தயார்; 2024 மக்களவை தேர்தலை குறிவைக்கும் மம்தா பானர்ஜி title=

கொல்கத்தா: காங்கிரஸோடு இணைந்து செயல்படத் தயார். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு குடையின்கீழ் திரண்டு 2024 தேர்தலை எதிர்கொள்வோம்- மமதா பானர்ஜி.

2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று ரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம், நேர்மறையாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறுவது நடைமுறை சாத்தியம் அற்றது என்றார். 

நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் பிஜேபியின் அமோக வெற்றியை நிராகரித்த மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சியை (SP) தோற்கடிக்க வாக்குகள் "கொள்ளையடிக்கப்பட்டது" என்று குற்றம் சாட்டினார். 

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் பானர்ஜி, "‘காங்கிரஸை நம்பி எதுவும் நடக்காது. அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர்கள் என்னை ஒதுக்கினாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அவர்களாவது ஒன்றாக இருக்கட்டும்" என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: ‘பாடம் கற்போம், தொடர்ந்து பாடுபடுவோம்’ - காங்கிரஸ்

முன்னதாக உத்தரப்பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மீண்டும் காங்கிரஸை குறிவைத்து, "தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதில் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டது" என்று கூறியதோடு, காங்கிரஸை டிஎம்சியுடன் இணைக்க வேண்டும் என்றும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியின் தலைமையில் கைகோர்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சில மூத்த தலைவர்கள் அழைப்பு விடுத்தார்கள். 

மேலும் மம்தா பானர்ஜி மட்டுமே "பிஜேபியை தோற்கடிக்கக்கூடியவர்" என்று டிஎம்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும், மாநில போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான ஃபிர்ஹாத் ஹக்கீம், "காங்கிரஸ் போன்ற பழைய கட்சி ஏன் காணாமல் போகிறது என்று எனக்குப் புரியவில்லை. நாங்களும் அந்தக் கட்சியில் அங்கம் வகித்தோம். காங்கிரசை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க வேண்டும். 

இதுவே சரியான நேரம். பின்னர் தேசிய அளவில் மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் கொள்கைகளின் அடிப்படையில் (நாதுராம்) கோட்சேவின் கொள்கைகளுக்கு எதிராக போராட முடியும் என்றார்.

மேலும் படிக்க: 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி...காங்கிரஸின் பரிதாப நிலை

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News