டெல்லியில் நடந்தது மேற்கு வங்காளத்தில் ஒருபோதும் நடக்காது... பாஜக-வை எச்சரிக்கும் மம்தா

டெல்லி கலவரத்தில், 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது ஒரு "திட்டமிட்ட இனப்படுகொலை" என்று மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 3, 2020, 07:48 PM IST
டெல்லியில் நடந்தது மேற்கு வங்காளத்தில் ஒருபோதும் நடக்காது... பாஜக-வை எச்சரிக்கும் மம்தா title=

தினாஜ்பூர்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசைத் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறார். கொல்கத்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தின் போது டெல்லியில் நடந்த கலவரங்கள் மற்றும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் தொடர்பான சர்ச்சைகள் ஆகியவற்றை மேற்கோள்காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

கொல்கத்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) அரசாங்கத்தை கடுமையாக சாட்டினார். 

அதன்பிறகு டெல்லி வன்முறை குறித்து ஆரம்பத்தில் மவுனமாக இருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதை கையில் எடுத்துள்ளார். அதாவது டெல்லி கலவரத்தில், இதுவரை 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், இது ஒரு "திட்டமிட்ட இனப்படுகொலை" என்று பானர்ஜி திங்களன்று குற்றம் சாட்டியிருந்தார். செவ்வாயன்று, "எந்தவொரு வெளிநாட்டவரும் இங்கு (மேற்கு வங்காளம்) ஒரு கலவரத்தையும் ஏற்பாடுத்தாதப்படி கவனமாக இருக்க வேண்டும்" என்று மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

"டெல்லியில் நடந்தது போல வங்காளத்தில் ஒருபோதும் நடக்காது" என்று பானர்ஜி மாநிலத்தின் வடக்கு பகுதியின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

டெல்லியில் நடந்ததை நினைந்த்து வேதனை அடைகிறேன். பல மரணங்கள் நடந்துள்ளன. பல இடங்களில் இருந்து சடலங்கள் இன்னும் மீட்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு இன்னும் மன்னிப்பைக் கோரவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த மரணங்களால் அவர்கள் வெட்கப்படுகிறார்கள், காயப்படுகிறார்கள் அல்லது வேதனைப்படுகிறார்கள் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.

எங்களுக்கு டெல்லி தேவையில்லை. எங்களுக்கு உ.பி. (உத்தரபிரதேசம்) தேவையில்லை. நீங்கள் வீடுகளை எரிக்கிறீர்கள். அனைத்தையும் அழிக்கிறீர்கள் என்று பானர்ஜி மேலும் கூறினார்.

வங்ககாள மக்களே கவலைப்படாதே. பீதி அடைய வேண்டாம். வங்காளத்தில் உள்ள மக்களை யாரும் தொட முடியாது. ஆவணங்கள் அல்லது தகவல்களைத் தேடி யாராவது உங்கள் கதவைத் தட்டினால், உங்களிடம் ஒரு வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இருக்கிறது, அது போதுமானதாக இருந்தது என்றும் அவர்களின் முகத்திற்கு நேராக சொல்லுங்கள் என்று அவர் கூறினார்.

குடியுரிமை (திருத்தம்) சட்டம் (Citizenship (Amendment) Act), குடிமக்களின் தேசிய பதிவு (National Register of Citizens) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு National Population Register) போன்ற சட்டங்களை தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News