Shiva Sena MLA Controversy Speech: மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட இருக்கின்றன. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே தேர்தல் விதிமுறைக்கு நடைமுறைக்கு வந்துவிடும். ஏப்ரல், மே மாதம் முழுவதும் அனைவரின் கவனமும் தேர்தல் மீதுதான் இருக்கும். தேர்தலுக்கு உரிய ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சாக மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
தேர்தல் தேதி தொடங்கியவுடன் நாடு முழுவதும் தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர். மறுபுறம் அரசியல் கட்சியினரும் தங்கள் கட்சியின் பூத் கமிட்டி முதல் தேர்தல் பிரச்சாரம் வரை அனைத்து வேலைகளையும் தொடங்கிவிட்டனர். அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளுக்கு இப்போதே தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. உதாரணத்திற்கு, எக்காரணம் கொண்டும் குழந்தைகளை தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் சில நாள்களுக்கு முன் கறாராக கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது மகாராஷ்டிராவின் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
यांना मतदान करण्यासाठी चिमुकल्या विद्यार्थ्यांनी दोन दिवस जेवायचं नाही म्हणजे हे काय महात्मा आहेत का? यांनी लहान मुलांच्या शिक्षणासाठी मतदारसंघात काय दिवे लावले? लहान मुलांचा राजकारणासाठी वापर करणं हा गुन्हा असून याबद्दल या आमदार महाशयांवर कारवाई झाली पाहिजे! pic.twitter.com/eF5a193BDW
— Rohit Pawar (@RRPSpeaks) February 10, 2024
மேலும் படிக்க | டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: இணையம், எஸ்எம்எஸ் சேவைகள் ரத்து
மகாராஷ்டிராவின் கலமனூரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக சிவசேனா சந்தோஷ் எல் பங்கர் உள்ளார். இவர் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கைதான். அந்த வகையில், மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் சந்தோஷ் பங்கர் ஈடுபட்டுள்ளார், அதே தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரது தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் ஆரம்பப் பள்ளியில் 10 வயதுக்குட்பட்ட சுமார் 50 மாணவர்களின் கூட்டத்தில் சந்தோஷ் பங்கர் பேசினார். " தனக்கு ஓட்டுப் போட உங்களின் பெற்றோர்கள் மறுத்தார் இரண்டு நாள்கள் உணவு உண்ணாதீர்கள். ஏன் சாப்பிடவில்லை என்று உங்கள் பெற்றோர் கேட்கும்போது, சந்தோஷ் பங்கருக்கு வாக்களிப்பீர்கள் என்றால் சாப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள்" என்று கிட்டத்தட்ட கடுமையான தொனியில் குழந்தைகளிடம் சந்தோஷ் பங்கார் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி (எம்விஏ) தலைவர்கள் பங்கரின் சர்ச்சையான கருத்துகள் குறித்து தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். வாக்குகளைப் பெறுவதற்காக சிறு குழந்தைகளை பயன்படுத்தியதற்காக பங்கார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ