மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

மகாராஷ்டிராவின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்ற பட்னாவிஸ் ஜி மற்றும் அஜித் பவர் ஜி ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 23, 2019, 09:00 AM IST
மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!! title=

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பாஜக-வை சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற என்.சி.பி. கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajit Pawar) இருவருக்கும் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

ட்விட்டரில் பிரதம் மோடி, "மகாராஷ்டிராவின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்ற பட்னாவிஸ் ஜி மற்றும் அஜித் பவர் ஜி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர்கள் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக மகாராஷ்டிராவில் சிவசேனா (Shiv Sena) - என்.சி.பி. (Nationalist Congress Party) மற்றும் காங்கிரஸ் (Congress)  இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தோல்வியுற்றதால், சனிக்கிழமை காலை மகாராஷ்டிராவில் பாஜக (Bharatiya Janata Party) தனது அரசாங்கத்தை என்.சி.பியின் ஆதரவுடன் அமைத்தது. பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) முதல்வராக பதவியேற்றார், என்.சி.பி. கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajit Pawar) துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

 

முதல்வராக பதவியேற்ற பின்னர், தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா மக்கள் தெளிவான ஆணையை வழங்கியதாக கூறினார். மகாராஷ்டிராவில் நிரந்தர அரசாங்கம் தேவை. இதற்காக, நாங்கள் என்.சி.பியுடன் ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளோம். சிவசேனா கட்சியால் தான் மாநிலதித்ல் ஜனாதிபதி ஆட்சியில் வந்தது. சிவசேனா தங்கள் வாக்குறுதிகளை நிராகரித்தார். இதனால் அரசாங்கத்தை அமைப்பதற்காக ஆளுனரை சந்திக்க நாங்கள் உரிமை கோரியுள்ளோம். மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை நடத்துவோம் எனக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், துணை முதல்வரான என்.சி.பியின் அஜித் பவார் பேசுகையில், "தேர்தல் முடிவுகள் வந்த நாள் முதல் இன்றுவரை எந்த கட்சியும் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்று கூறினார். மகாராஷ்டிரா உழவர் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டது, எனவே நாங்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தோம். அதனால் பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளோம் எனக் கூறினார்.

நேற்று மாநிலத்தில் அரசாங்கம் அமைப்பது தொடர்பாக காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சிவசேனா தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு முடிந்ததை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருப்பார் என்ற கொள்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனக் கூறிய நிலையில், இன்று திடிரென மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

288 தொகுதிகளில் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் அக்டோபர் 24, 2019 அன்று அறிவிக்கப்பட்டது. சிவசேனா தனது கட்சியை சேர்ந்தவரை மகாராஷ்டிராவின் முதல்வராகக் கொண்டு வருவதில் பிடிவாதமாக இருந்தது. இந்த கோரிக்கையை பாஜக வெளிப்படையாக நிராகரித்தது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தனிக்கட்சியாக மிகப் பெரிய வெற்றியை பெற்ற என்ற பெயரில் முதலமைச்சர் பதவியை ஐந்து ஆண்டுகள் பெறுவதற்கான உரிமை எங்கள் கட்சிக்கு உண்டு என்றும், சிவசேனாவுடன் இந்த பதவிக்கு 50:50 சூத்திரத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் பாஜக தலைமை சுட்டிக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News