மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2019 (Maharashtra Assembly Elections 2019) அதன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (அக்டோபர் 24) வாக்கு எண்ணிக்கை (Maharashtra-Haryana Election Result 2019) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு மிகப்பெரிய பெரும்பான்மை கிடைக்கும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் என்.சி.பி கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. ஆரம்பத்தில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 199-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்தமுறை சிவசேனாவின் தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த ஆதித்யா தாக்கரே முதல் முறையாக போட்டியிட்டார். அவர் களம் கண்ட வோர்லியை தொகுதியில் முன்னணியில் உள்ளார். என்.சி.பி தலைவர் அஜித் பவார் பரமதியை விட முன்னணியில் உள்ளார். அதே நேரத்தில், சதாரா மக்களவை இடைத்தேர்தலில் சரத் பவாரின் கட்சி என்.சி.பி. முன்னிலை வகிக்கிறது.
மேலும் மகாராஷ்டிரா தேர்தலைக் குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா மற்றும் ஆர்.பி.ஐ கூட்டணி முழுமையான பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மக்களுக்கு மோடி ஜி மீது நம்பிக்கை உள்ளது, எங்கள் வெற்றி நிச்சயம் எனக் கூறினார்.
Mumbai: BJP state office decorated ahead of counting of votes for #MaharashtraAssemblyPolls pic.twitter.com/WbVuWwy92j
— ANI (@ANI) October 24, 2019
தற்போது நிலவரப்படி, பாஜக 125, சிவசேனா 74 இடங்களில், காங்கிரஸ் 39, என்சிபி 38 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வாக்கெடுப்பு, பாஜக + சிவசேனா கூட்டணியின் என்டிஏ (NDA) வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புக்கள் வெளியாகினர். கருத்து கணிப்புக்களை மெய்பிக்கும் வகையில் முடிவுகள் வெளியாகி வருகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் 288 சட்டமன்ற இடங்களுக்கான 2014 தேர்தலில், 123 இடங்களை கைப்பற்றி பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. மகாராஷ்டிராவில் முதல் முறையாக பாஜக இவ்வளவு இடங்களை வென்றது. அதே நேரத்தில், காங்கிரஸ் 42 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சிவசேனா 63 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஷரத் பவாரின் என்சிபிக்கு 41 இடங்கள் கிடைத்தன.