நாடு முழுவதும் உள்ள அனைத்து சிவன்கோயில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி பிப்ரவரி 1 அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழகத்திலும் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலம் என அழைக்கப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும், பிப்ரவரி 1 அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Maha Shivratri Fair began in Himachal Pradesh's Mandi, yesterday. pic.twitter.com/sQsERKNZqJ
— ANI (@ANI) February 16, 2018
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாய என கோஷம் எழுப்பினர்.
இதை தொடர்ந்து, நேற்று மகா சிவராத்திரியையொட்டி ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி நகரில் உள்ள சிவன்கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சுவாமி வீதி உலாவில் பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்தும் கோலாட்டம் ஆடியபடியும் கலந்துகொண்டனர். இதையடுத்து, காலை பார்வதிதார்த்தினி சிவன் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்துக்கு பால், இளநீர், தயிர் உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் சிவனை தரிசனம் செய்தனர்.