நீமாச்: மத்திய பிரதேசத்தின் நீமச் மாவட்டத்தில் உள்ள கனாவதி சிறையில் இருந்து நான்கு கைதிகள் தப்பி ஓடினர். அவர்களை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டு உள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென நான்கு கைதிகலும் பாதுகாப்பு வட்டத்தை உடைத்து, சிறையில் இருந்து தப்பி ஓடினார்கள். இந்த குற்றவாளிகளில் ஒருவர் மீது கொலை, மற்றொருவர் மீது கற்பழிப்பு மற்றும் மற்ற இரண்டு பேர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர். சிறையில் இருந்து தப்பியோடிய 4 கைதிகளை சிறை நிர்வாகம் தேடத் தொடங்கியுள்ளது.
தப்பியோடிய 4 கைதிகளின் விவரம்:
1. நாரசிங், வயது 20, தந்தை பெயர் பன்சிலால் பஞ்சாரா, பிந்தர் மாவட்டம், 10 வருடம் சிறை தண்டனை.
2. டிபே லால், வயது 19, அப்பா பெயர் தசரத் தோவ், வசிக்கும் கிராமம் கோக்ரி, நாகான் மாவட்டம் காவல் நிலையம், 10 ஆண்டு சிறை தண்டனை.
3. பங்கஜ், வயது 21, தந்தை பெயர் ராம்நாராயண் மோங்கியா, கிராமம் நல்வாய், சதாதி மாவட்டம்,
4. லேக் ராம், வயது 29, தந்தை பெயர் ரமேஷ் பவாரி, கிராமம் சந்த்வாசன், மல்ஹர்கர் மாவட்ட காவல் நிலையம்