குழப்பத்தில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவன் எப்படி நாட்டை காப்பர்: சிவராஜ் சிங்

வரும் 28 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு Zee News பத்திரிக்கையாளர் மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானிடம் தேர்தல் குறித்து நேர்காணல் விவாதம் நடத்தினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2018, 01:32 PM IST
குழப்பத்தில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவன் எப்படி நாட்டை காப்பர்: சிவராஜ் சிங் title=

வரும் 28 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு Zee News பத்திரிக்கையாளர் மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானிடம் தேர்தல் குறித்து நேர்காணல் விவாதம் நடத்தினார்.

கேள்வி: நீங்கள் எந்த அடிப்படையில் பொதுமக்களிடையே வாக்கு கேட்டு செல்கிறீர்கள்?

சிவராஜ் சிங்: காங்கிரஸ் இந்த மாநிலத்தை பாழாக்கி விட்டது. நாங்கள் பின்தங்கி இருந்த மாநிலத்தை ஒரு வளரும் மாநிலமாக ஆக்கினோம். சாலைகள் என்ற பெயரில் குழிகள் இருந்தன, மின்சாரம் என்ற பெயரில் இருட்டு மட்டும் இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியால் மாநிலம் முன்னேறி உள்ளது. வரலாற்ரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுகிறோம். 

கேள்வி: மாநிலத்தின் சூழ்நிலை பார்த்தால் பாஜக ஆட்சி மீது கோவம் வருகிது என்று காங்கிரஸ் சொல்கிறது? இதுப்பற்றி உங்கள் கருத்து?

சிவராஜ் சிங்: மக்கள் கோபத்தில் இல்லை. காங்கிரஸ் தான் கோபத்தில் உள்ளது. ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக அவர்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதனால் அவர்களுக்கு கோபம் வருகிறது. ஒரு விவசாயி மகன் அதிகாரத்தில் உட்கார்ந்திருப்பதாலும் அவர்களிடம் கோபம் வருகிறது.

கேள்வி: பிரதமர் மோடியை "ஜாய்வாளா" (டீ விற்பவர்) என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் விமர்சித்து உள்ளார். அதுக்குறித்து உங்கள் கருத்து? 

சிவராஜ் சிங்: நாட்டின் அரசியலமைப்பு படி நமக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதை தவறாக பயன்படுத்தக் கூடாது. காங்கிரஸ் கட்சி ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. இவர்களுக்கு தேசத்தின் மீது பக்தியும், அன்பும் வைத்திருப்பவர்களை கண்டால் பயமாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் இந்து மற்றும் தேசத்திற்கு விரோதமானவர்கள்.

கேள்வி: அயோத்தியில் ராம் கோவில் கட்டப்படுமா? 

சிவராஜ் சிங்: ராம் கோவில் என்பது தேர்தல் பிரச்சனை இல்லை. அது நம்பிக்கை மற்றும் பயபக்தியுடைய விஷயம். எங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் ராமர் இருக்கிறார். அனைவரும் ராம் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் காங்கிரஸ் இதை திசைதிருப்ப விரும்புகிறது. தேசத்தில் வாழும் அனைவரும் நீதிமன்றத்தின் சம்மதத்துடன் ராம் கோயில் கட்ட வேண்டும் என விரும்புகிறார்கள்.

கேள்வி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உங்கள் மிகவும் விமர்சித்து பேசி வருகிறார்? அது பற்றி உங்கள் கருத்து?

சிவராஜ் சிங்: ராகுல் ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழலால் சூழப்பட்டுள்ளனர். அவருடைய குடும்பத்தின் மீது தீவிரமான உழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதை இந்த நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார். இதனால் தான் அவர்கள் பி.ஜே.பி. மீது குற்றம் சாட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்பொழுதும் குழப்பத்தில் இருப்பவர். குழப்பத்தில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவன் எப்படி நாட்டை காப்பர். இந்த தேர்தலில் பாஜக அமோக பெரும்பான்மையுடன் வெற்றி பெரும். நாட்டின் மக்களுக்கு மோடி ஜீ மீது பக்தியும் நம்பிக்கையும் உள்ளது. மக்களவை தேர்தல் 2019-ல் நாட்டிம் பிரதமராக மீண்டும் மோடி ஜீ வருவார்.

Trending News