அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவைக் கொண்டாடுவதற்காக ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square) உள்ள பிரமாண்டமான விளம்பர பலகைகளில் ராமர் மற்றும் அயோத்தி ராமர் கோயிலின் (Ayodhya Ram Temple) 3 D உருவப்படங்கள் காண்பிக்கப்படும். இந்த நாள் தனித்துவமான வரலாற்று சிறப்பு மிக்க நாள் என அமைப்பாளர்கள் வர்ணிக்கிறார்கள்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் நடக்கப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை கொண்டாடுவதற்காக நியூயார்க்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமெரிக்காவில் உள்ள பிரபல சமூகத் தலைவரும், அமெரிக்க இந்திய பொது விவகாரக் குழுவின் தலைவருமான ஜெகதீஷ் செஹானி புதன்கிழமை தெரிவித்தார். ஆக்ஸ்ட் 5 ஆம் தேதி, அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற சொற்களின் படங்கள், ராமரின் உருவப்படங்கள் மற்றும் வீடியோக்கள், கோயிலின் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலைகளின் 3 D உருவப்படங்கள், மோடி அவர்கள் முதல் கல்லை வைக்கும் காட்சிகள் என அனைத்தும் பல விளம்பர பலகைகளில் காண்பிக்கப்படும். இந்த விளம்பர பலகைகள், உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான டைம்ஸ் சதுக்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும்.
திரு. செஹானி, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி டைம்ஸ் சதுக்கத்தில் ஒன்றுகூடி, இனிப்புகளை விநியோகிப்பார்கள் என்று கூறினார்.
இது வாழ்நாளில் ஒரு முறையோ அல்லது ஒரு நூற்றாண்டில் ஒரு முறையோ வரும் நிகழ்வு அல்ல. இது மனிதகுல வரலாற்றில் ஒரு முறை வரும் நிகழ்வாகும். இந்த நிகழ்வை நாம் அதற்குத் தகுந்த வகையில் கொண்டாட வேண்டும். அமெரிக்காவில், அதற்கு டைம்ஸ் சதுக்கம்தான் ஏற்ற இடம் என்று அமெரிக்க இந்தியர்கள் கருதுகிறார்கள்.
ALSO READ: ராமர் கோயில் அடியில் டைம் கேப்ஸ்யூல் : ஆதாரமற்ற தகவல் என அறக்கட்டளை மறுப்பு
“பிரதமர் மோடியின் கீழ், ராமர் கோயில் கட்டப்படுவது என்பது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு ஒரு கனவு நனவாவது போன்றதாகும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த நாள் விரைவில் வரும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் மோடியின் தலைமை காரணமாக, இந்த நாள் வந்துவிட்டது. அதை ஒரு பொருத்தமான முறையில் கொண்டாட விரும்புகிறோம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ராமரின் உருவப் படங்கள் டைம்ஸ் சதுக்கத்தை ராம பக்தியில் மூழ்கடிக்கும்” என்கிறார் மற்றொரு அமெரிக்க இந்தியர்.
பிப்ரவரி மாதம் ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பிரமாண்டமான ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுமாறு மோடியை அறக்கட்டளை அழைத்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்காக அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
ALSO READ: ஆகஸ்ட் 4,5 ஆம் தேதிகளில் அயோத்தியில் அனைத்து கோயில்களும் திறப்பு....