Election Results: மாத்தி யோசிக்கும் வாக்களர்கள்! சிறையில் இருந்தால் என்ன? வாக்களித்த மக்கள்!

Surprising Loksabha Election Results: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தேர்தல் முடிவுகளை சொல்லலாம். ஆனால், மக்களை சிந்திக்க வைக்கும் சில வித்தியாசமான வெற்றிகளையும் இந்த மக்களவைத் தேர்தல் பதிவு செய்திருக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 4, 2024, 03:53 PM IST
  • மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
  • சிந்திக்க வைக்கும் சில வித்தியாசமான வெற்றிகள்
  • தேசிய பாதுகாப்பும் எல்லை மாநிலங்களின் வேட்பாளர்களும்
Election Results: மாத்தி யோசிக்கும் வாக்களர்கள்! சிறையில் இருந்தால் என்ன? வாக்களித்த மக்கள்! title=

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி தொடரும் இன்று, வெளியான சில முடிவுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முன்னதாக, பாஜகவிற்கு சாதகமாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இருந்தாலும், இதுவரை வாக்கு எண்ணிக்கை முடிவுகள், பாரதிய ஜனதா கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. காங்கிரஸ் கூட்டனிக்கு பலம் அதிகாவது போல தோன்றினாலும், மக்களை சிந்திக்க வைக்கும் சில வித்தியாசமான வெற்றிகளையும் இந்த மக்களவைத் தேர்தல் பதிவு செய்திருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதன் அடிப்படையில், பிற நாடுகளுடனான எல்லையில் அமைந்திருக்கும் மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். அதில், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் இதுவரை வெளியான முடிவுகளில் மூன்று தொகுதிகளில் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கும் வேட்பாளர்களின் பின்னணியை ஆராய்வோம்.

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித் பால் சிங்

அசாம் மாநிலத்தில் சிறையில் இருக்கும் காலிஸ்தான் அபிமானி அம்ரித் பால் சிங் , பஞ்சாபின் காதோர் சாஹிப் தொகுதியில் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இந்த சீக்கிய மத போதகர், ​​காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி'யின் தலைவராவார். தற்போது அம்ரித்பால் சிங், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாமில் உள்ள திப்ருகர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.  

மத போதகரான அம்ரித்பால் சிங்கின் வெற்றி என்பது, சிறையில் இருந்தாலும் அவரை வெற்றி பெற வைக்கும் மக்களின் மனவோட்டத்தைக் காட்டுவதாக உள்ளது. நாட்டின் பிரிவினையை ஆதரிக்கும் ஒருவரை பஞ்சாப் மக்கள் ஆதரிப்பது தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதால், அம்ரித்பால் சிங் வெற்றியடைவது என்பது சர்வதேச அளவில் அனைவராலும் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்முவில் இரண்டு இடங்களில் பாஜக முன்னிலை

பாரமுல்லா மக்களவைத் தேர்தல் முடிவுகள்

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் முதல் மக்களவைத் தேர்தலில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளுக்கும் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. UAPA வழக்கில் கைது செய்யப்பட்டு,  நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் இருக்கும் எஞ்சினியர் ரஷீத், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி முன்னிலையில் உள்ளார்.

காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில், என்சினியர் ரஷீத் வெற்றி உறுதியாகிவிட்டது என்பதை, தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லாவின் தோல்விக்கான ஒப்புதல் உறுதி செய்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னார் முதலமைச்சர் உமர் அப்துல்லா சுயேச்சை வேட்பாளருமான ஷேக் அப்துல் ரஷீதைவிட 1,49,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கினார். 

தனது தோல்வியை ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர், தவிர்க்க முடியாததை ஏற்க வேண்டிய நேரம் இது என்றும், வடக்கு காஷ்மீரில் வெற்றி பெறவிருக்கும் எஞ்சினியர் ரஷீத்துக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார். ஆனால், அவரது வெற்றி அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் என்று சொல்லிவிடமுடியாது. வடக்கு காஷ்மீர் மக்களுக்கு உரிமை உள்ள பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.

ஃபரித்கோட் தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரப்ஜித் சிங் கல்சா
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா, பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் தனித் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று, பிரதமர் இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்படார். அன்றைய பிரதமரை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் கல்சா,  இதற்கு முன்னதாகவும் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.

2007 இல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பர்னாலா மாவட்டத்தில் உள்ள பதவுரில் போட்டியிட்டு 15,702 வாக்குகள் பெற்றார் என்றால், 2004 லோக்சபா தேர்தலில் பதிண்டா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 1,13,490 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதன்பிறகு, 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிண்டா தொகுதியிலும், 2014 இல் ஃபதேகர் சாஹிப் தனித் தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறவில்லை.  

சரப்ஜித் சிங் கல்சாவின் அம்மா, அதாவது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மனைவி பிமல் கவுர் மற்றும் அவரது தாத்தா சுச்சா சிங் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Punjab Lok Sabha Election Results 2024: இந்திரா காந்தியை கொலை செய்தவரின் மகன் ஃபரித்கோட் தொகுதியில் முன்னிலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News