காங்கிரஸ் 40 தொகுதியில் வென்றால் மோடி தூக்கில் தொங்குவாரா? கர்கெ சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் வென்றால் டெல்லி விஜய் சோக்கில் பிரதமர் மோடி தூக்கில் தொங்குவாரா? என கேள்வி எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2019, 04:26 PM IST
காங்கிரஸ் 40 தொகுதியில் வென்றால் மோடி தூக்கில் தொங்குவாரா? கர்கெ சர்ச்சை பேச்சு title=

பெங்களூர்: 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (Mallikarjun Kharge) பிரதமர் மோடி குறித்து பேசியது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. 

கர்நாடகா சட்டசபை தொகுதியான சின்சொளிக்கு (Chincholi) வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுபாஷ் ரத்தோட் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரத்தில் ஈடுப்பட்டு வந்தார்.

அப்பொழுது, "பிரதமர் மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் கூட வெல்லாது என்று கூறி வருகிறார். இதை மக்கள் நம்புகிறீர்களா? காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் வென்றால் டெல்லி விஜய் சோக்கில் பிரதமர் மோடி தூக்கில் தொங்குவாரா? நினைவுபடுத்த விரும்புகிறேன் 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளை கைப்பற்றியது" எனப் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக தரப்பில் இருந்து பல கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இது போன்ற ஒரு மோசமான அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ச்சுன் கர்கெ தெரிவிப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு மல்லிகார்ச்சுன் கர்கெ மன்னிப்பு கேட்ட வேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Trending News