புதுடெல்லி: பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல் நிலைமை மோசமாக உள்ளது. ஆதாரங்களின்படி, ஆகஸ்ட் 9 முதல் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவமனையில் (AIIMS) தொடர்ந்து மருத்துவ மேற்பார்வையில் இருக்கிறார். அங்கு எக்ஸ்ட்ரா கோர்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேஷன் (ஈசிஎம்ஓ) மற்றும் இன்ட்ரா ஏரோடிக் பலூன் (ஐஏபிபி) ஆதரவில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது இதயம் மற்றும் நுரையீரல் சரியாக இயங்கவில்லை என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன. ஜெட்லியின் நிலையை அறிய அனைத்து முக்கிய தலைவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி சுவாசக்கோளாறு மற்றும் உடல் பலவீனம் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனையில், இருதயம் மற்றும் நுரையீரல் சரியாக செயல்படாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து இதயம் முறையாக இயங்குவதற்கு மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வழக்கத்தைவிட கூடுதலான செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தற்போது பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான லால் கிருஷ்ணா அத்வானி இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை பார்க்க வந்துள்ளார்.
ஏற்கனவே அருண்ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வந்த தகவலையடுத்து, காலையில் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் எய்ட்ஸில் உள்ள ஜெய்ட்லிக்கு அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க வருகை தந்தனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் இங்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.