2019 நாடாளுமன்ற தேர்தல்: 7 கட்டங்களில் தேர்தல்

தமிழகம், புதுச்சேரியில் ஏப்.18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும்.

Last Updated : Mar 10, 2019, 06:27 PM IST
2019 நாடாளுமன்ற தேர்தல்: 7 கட்டங்களில் தேர்தல் title=

5:59 PM 3/10/2019

வேட்புமனு தாக்கல்: மார்ச்:19. தமிழகம் & புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18 ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை - மே 23 தேதி- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:59 PM 3/10/2019

தமிழகத்தில் 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து தனியாக வெளியிடப்படும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:47 PM 3/10/2019

முதல் கட்ட தேர்தல் - 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள், 2 -ம் கட்ட தேர்தல் -13 மாநிலங்களில் உள்ள  97 தொகுதிகள், 3 -ம் கட்ட தேர்தல் -14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகள், 4 -ம் கட்ட தேர்தல் - 9 மாநிலங்களில் உள்ள  71 தொகுதிகள்  தேர்தல் நடத்தப்படும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:47 PM 3/10/2019

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:37 PM 3/10/2019

முதல் கட்ட தேர்தல் 20 மாநிலங்களில் 91 தொகுதிகள் நடைபெகிறது. ஆந்திரா, அருணாச்சலபிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், தெலங்கானா, தமிழ்நாடு, உத்தரகண்ட், அந்தமான் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல். தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 2 வது கட்ட தேர்தல் 13 மாநிலங்கள் 97 தொகுதிகளில் நடைபெறுகிறது- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:32 PM 3/10/2019

வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு, ஏப்ரல் 18ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு, ஏப்ரல் 18ம் தேதி 3ம் கட்ட தேர்தல், ஏப்ரல் 29ம் தேதி நான்காம் கட்ட தேர்தல், மே 6ம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல், மே 12 தேதி ஆறாம் கட்ட தேர்தல், மே 19ம் தேதி 7ம் கட்ட தேர்தல் நடைபெறும். வேட்பு மனு கடைசி நாள் 25 மார்ச்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

5:31 PM 3/10/2019

நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23 அன்று எண்ணப்படும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:31 PM 3/10/2019

வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:31 PM 3/10/2019

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:26 PM 3/10/2019

தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப்-மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரது அடையாளம் பாதுகாக்கப்படும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:25 PM 3/10/2019

அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:24 PM 3/10/2019

போட்டியிடும் வேட்பாளர்கள்  வருமானவரி கணக்கு தாக்கல் செய்து வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டும். வருமானவரி தாக்கல் செய்யாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:24 PM 3/10/2019

தேர்தலில் 17.4 லட்சம் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:23 PM 3/10/2019

மாற்றுத்திறனாளிகள் , முதியோருக்கு வாக்கு சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:21 PM 3/10/2019

பதற்றமான வாக்குச் சாவடிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:20 PM 3/10/2019

18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யாவிட்டால் வேட்புமனு நிராகரிக்கபப்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:19 PM 3/10/2019

தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:19 PM 3/10/2019

வாக்குபதிவு தினத்திற்கும் முன்பாக ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே புகைப்படத்துடன் கூடிய ஓட்டர் சிலிப் வழங்கப்படும். இது இல்லாதவர்கள் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:18 PM 3/10/2019

இலவச டோல்ஃப்ரி எண் 1950 மூலமாக புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்க்கலாம்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:17 PM 3/10/2019

அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் ஆழமான ஆலோசனைகள் மேற்கொண்டோம். அதேபோல் மாநில தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது தலைமை தேர்தல் ஆணையர் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:16 PM 3/10/2019

2014க்கு பிறகு 8.4 கோடி வாக்காளர்கள் கூடுதலாக இணைந்திருக்கின்றனர்- தலைமை தேர்தல் ஆணையர் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:15 PM 3/10/2019

வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது அவசியம்அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:14 PM 3/10/2019

வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக தேர்தலை நடத்த விரும்புகிறோம் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:13 PM 3/10/2019

23 மாநிலங்களில் 100 சதவிகித வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:11 PM 3/10/2019

பல்வேறு துறை அதிகாரிகளுடன்  பேசி தேர்தலை சுமுகமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:10 PM 3/10/2019

17வது மக்களவை தேர்தலுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:07 PM 3/10/2019

அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள் , தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளோடு விரிவான ஆலோசனை நடத்தியுள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வது பற்றியும் ஆலோசித்தோம்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5:07 PM 3/10/2019

தேர்தலை சுதந்திரமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
5:05 PM 3/10/2019

தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுகிறார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்களவை தேர்தல் எப்போது என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தேர்தல் அணையம் அறிவித்து இருந்தது. 

ஆந்திர, ஒரிசா, சிக்கிம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. மேலும் தமிழகத்திலும் மிக முக்கியமானதாக கருதப்படும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

Trending News