Essel குழுமத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான டாக்டர் சுபாஷ் சந்திரா, மும்பையில் உள்ள மவுண்ட் லிடெரா ஸ்கூல் இன்டர்நேஷனல் 2022இன் வகுப்பில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை சனிக்கிழமை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மவுண்ட் லிட்டெரா மீது நம்பிக்கை வைத்து தங்கள் குழந்தைகளை பட்டப்படிப்புக்கு அனுப்பிய அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி.
நிகழ் காலத்தில் வாழுங்கள்:
கடந்த காலத்தில் வருத்தம் இருக்கிறது, எதிர்கால எண்ணங்கள் கவலையைத் தருகின்றன, எனவே நிகழ்காலத்தில் வாழ முயற்சி செய்யுங்கள். யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த யதார்த்தம் பாதி துன்பங்களை நீக்குகிறது.
மேலும் படிக்க | 6 ஆண்டுகளுக்குப் பின் ஜாமீனில் விடுதலையான இந்திராணி முகர்ஜி
1926 மே 21ஆம் தேதி அன்று, பெரிய தாத்தா இந்த குழுமத்தை நிறுவினார். எங்களது குடும்பம் ஏற்ற இறக்கங்களைக் கண்டது. அந்தக் கற்றல் தான்எல்லா இடங்களிலும் துன்பங்கள் இருப்பதாகக் கூறுகிறது. பெரியவர்களிலிருந்து சிறியவர்கள்வரை அனைவருமே துன்பத்தை சந்தித்துத்தான் ஆக வேண்டும்” என்றார்.
அவரது பேச்சுக்கு அரங்கத்தில் இருந்தவர்கள் தங்களது வரவேற்பை கொடுத்தனர். மும்பையின் மவுண்ட் லிட்டெரா ஸ்கூல் இன்டர்நேஷனலில் பட்டம் பெறும் மாணவர்களில் இவர்கள் இது இரண்டாவது பேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | போலி என்கவுண்ட்டர்...விசாரணை ஆணைய அறிக்கையால் ஹைதராபாத் போலீஸாருக்கு சிக்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR