நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை இன்று முதல் மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசே மதுக்கடைகள் நடத்துவதால் கால அவகாசம் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து 100 மீ சுற்றளவுக்குள் மதுக்கடை அமைக்க அரசு அனுமதி கோரியிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் தினமும் நடைபெறும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்தில் இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வக்கீல் கே.பாலு 2012ல் சென்னை ஐ கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐ கோர்ட் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றின் அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்றும் உத்தரவு பிரபித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐ கோர்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐ கோர்ட் தலைமை நீதிபதி கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பில் அனைத்து மாநிலங்களிலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை ஏப்ரல் 1-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும் பழைய கடைகளுக்கான அனுமதியை புதுப்பிக்கக்கூடாது என்றும் புதிய மதுபான கடைகளுக்கு எந்த விதத்திலும் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள அனைத்து விதமான மதுபான கடைகள், பார்களை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலையில் மதுக்கடைகளை மூட இன்றே கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.