Delhi Revenue: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆப்பு வைத்த மதுபான விற்பனை! இப்போது ஆதாயமாக மாறுகிறது

Excise Dept Revenue: மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக நாளை குஜராத் சுற்றுப்பயணம் செல்லும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் தனது பயணத்தின்போது பொதுக்கூட்டங்களில் பேசுவாா்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 7, 2024, 06:59 AM IST
  • டெல்லி மதுபான விற்பனை
  • ஆப்பு வைத்த மதுபானமே ஆதாயத்தையும் கொடுக்கிறது
  • ஆம் ஆத்மி கட்சியும் மதுபான விற்பனையும்
Delhi Revenue: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆப்பு வைத்த மதுபான விற்பனை! இப்போது ஆதாயமாக மாறுகிறது title=

புதுடெல்லி: மதுபான ஊழல் புகார்கள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு நான்காவது முறையாக சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆம் ஆத்மிக் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை குஜராத்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை குஜராத் செல்லும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் தனது இந்தப் பயணத்தின்போது பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவாா்.

குஜராத் மாநிலத்தில் கட்சித் தொண்டா்களை சந்தித்து அவர் கலந்துரையாடுவாா். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சைதா் வாசவாவை சந்தித்து, வியூகம் அமைப்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில், ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு பெரிய தலைவர்களான அதிஷி சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கேஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த சுற்றுப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. 

அக்டோபரில் இரண்டு முறையும், நவம்பரில் ஒரு முறையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபான விற்பனை முறைகேடு தான் ஆம் ஆத்மிக்கு பிரச்சனையாக இருக்கும் நிலையில், அதே மதுபான வழக்கே அவர்களுக்கு லாபத்தையும் கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க | தில்லி முதல்வர் வீட்டின் முன் போலீஸார் குவிப்பு... கைது செய்யப்படுவாரா கெஜ்ரிவால்.

டெல்லியில் அதிகரித்த மது விற்பனை 
டெல்லியில் அதிக மதுபானக் கடைகள் இருப்பதாலும், பல்வேறு பிராண்டுகள் கிடைப்பதாலும், மது விற்பனை அதிகரித்துள்ளது. டெல்லி அரசின் கலால் துறையின் வருவாய் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2023-24 மூன்றாம் காலாண்டில் 9% அதிகரித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை சுமார் 635 மதுபானக் கடைகள் மற்றும் 920 ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்கள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ததன் மூலம் கலால் துறைக்கு கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி மூலம் ரூ.1,889.4 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் வருவாய்

கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மதுபான விற்பனை மீதான கலால் வரி மூலம் மொத்தம் ரூ.1,725.6 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தலைநகர் டெல்லியில் பீர், விஸ்கி, ஓட்கா, ஜின், ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் 8 நாட்களில் மட்டும் டெல்லி மக்கள் 245 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சுமார் 1.4 கோடி மதுபாட்டில்களை கடைகளில் வாங்கியுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.218 கோடி மதிப்பிலான 1.1 கோடி மதுபாட்டில்கள் விற்பனையானதை விட அதிகம்.

ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மதுபானம் விற்பனை
இதுமட்டுமின்றி, புத்தாண்டை முன்னிட்டு டெல்லி மதுக்கடைகளில் சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பிராண்டுகளின் 24 லட்சத்துக்கும் அதிகமான மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. டிசம்பர் 31, 2022 அன்று, டெல்லியில் ஒரே நாளில் ரூ.45 கோடி மதிப்புள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான பாட்டில்கள் விற்கப்பட்டன.

மேலும் படிக்க | “மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை” மேற்கு வங்கத்தில் 2 சீட் ஒதுக்கியதால் காங்கிரஸ் கோபம்

மதுபான விற்பனையின் மீதான கலால் வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரி மூலம் கிடைக்கும் வருமானம் டெல்லி அரசாங்கத்தின் முக்கியமான வருவாய் ஆதாரமாகும். ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான 2023-24 ஆம் ஆண்டின் மூன்று காலாண்டுகளில் கலால் கட்டணத்திலிருந்து மொத்தம் ரூ.5,453.6 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான ஊழல் பின்னணி
தலைநகர் டெல்லியில், 2003ம் ஆண்டு முதல், எல்1 மற்றும் எல்10 லைசென்ஸ்கள் விற்பனையாளர்களுக்கு மது விற்பனைக்காக வழங்கப்பட்டன. L1 கடைகள் DDA சந்தை மற்றும் உள்ளூர் ஷாப்பிங் மையங்களில் இருந்தன. எல் 10 ஒயின் கடையின் உரிமம் பொருட்களை வாங்குவதற்காக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், மார்ச் 22, 2021 அன்று, மணீஷ் சிசோடியா புதிய மதுக் கொள்கையை அறிவித்தார். அப்போது டெல்லியில் 60 சதவீத கடைகள் அரசு மற்றும் 40 சதவீதம் தனியார் கடைகள் இருந்தன. இதற்குப் பிறகு 2021-22 மதுக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் 27 மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ஜூலை 2022 இல், புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்துவதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. தலைமைச் செயலாளரின் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எல்ஜி விகே சக்சேனா வலியுறுத்தினார்.

இந்த வழக்கில், ஆகஸ்ட் 2022 இல், மணீஷ் சிசோடியா, மூன்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 26 பிப்ரவரி 2023 அன்று மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அக்டோபர் 2023 இல் சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க | ஒரே நாளில் 774 பேருக்கு கொரோனா தொற்று பரவும் கொரோனாவால் பதற்றம்! 

மேலும் படிக்க | NPS: இரட்டிப்பு லாபம் அளிக்கும் திட்டம்.... ஓய்வூதியத்துடன் பம்பர் வருமானமும் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News