கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து - ஒருவர் பலி... 5 பேர் கதி என்ன? - பெங்களூருவில் பரபரப்பு

Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 14 பேர் மீட்கப்பட்டதாகவும், இன்னும் 5 பேர் அங்கு சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sudharsan G | Last Updated : Oct 23, 2024, 12:43 AM IST
  • மொத்தம் 20 பேர் சிக்கியிருப்பதாக தகவல்.
  • ஆனால் எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை.
  • 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்.
கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து - ஒருவர் பலி... 5 பேர் கதி என்ன? - பெங்களூருவில் பரபரப்பு title=

Bangalore Building Collapse Latest News Updates:  பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 14 பேர் மீட்கப்பட்டதாகவும், இன்னும் 5 பேர் அங்கு சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தரைமட்டமான கட்டடத்தின் இடிபாடுகளுள் மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் எண்ணிக்கை இன்னும் உறுதியாக தெரியவில்லை. கிழக்கு பெங்களூரு பகுதியில் உள்ள பாபுசபால்யா பகுதியில் இந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இடிபாடுகளை நீக்கி உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

மிதக்கும் பெங்களூரு 

பெங்களூருவில் கடந்த மூன்று நாள்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. சாலைகளில் கார்கள், இருச்சக்கர வாகனங்கள், பேருந்துகள் மிதந்து செல்கின்றன. இதனால், பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால்தான் தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டும் ஆகியுள்ளது. 

மேலும் படிக்க | Wayanad by-election: யார் இந்த நவ்யா ஹரிதாஸ்? பிரியங்காவை தோற்கடிக்க பாஜக புதிய யுக்தி!

பெங்களூரு கனமழையால் தவித்து வருவதால் அங்குள்ள மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்கள். அதிகமாக வரி கட்டியும் கூட ஆப்பிரிக்க நாடுகளில் கிடைப்பது போன்ற சேவையை கிடைக்கிறது என சமூக வலைதளங்களில் தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தி, காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் மீது தங்களின் குற்றச்சாட்டையும் முன்வைத்து வருகின்றனர். 

'அரசால் இயற்கையை தடுக்க முடியாது'

முன்னதாக, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பெங்களூரு கனமழை குறித்து கூறுகையில், அரசால் இயற்கையை தடுக்க முடியாது என்றும் ஆனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். பெங்களூரு வளர்ச்சித்துறைக்கும் டி.கே. சிவகுமார் தான் அமைச்சராக உள்ளார்.  

மேலும் அவர்,"துபாய், டெல்லி போன்ற நகரங்களில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் ஊடகங்கள் மூலம் பார்த்திருப்பீர்கள். டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவுகிறது. துபாய் மழையே இல்லாத வறட்சியான பகுதி ஆனால் இப்போது அங்கு கனமழை பெய்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சூழல் நிலவுகிறது. நாம் இதை நிர்வகித்து வருகிறது. நம்மால் இயற்கையை நிறுத்த முடியாது, இருந்தாலும் களத்தில் நிற்கிறோம். என்ன நடக்கிறது என்ற தகவலை என மொத்த குழுவிடம் இருந்தும் நான் பெற்று வருகிறேன்" என பேசினார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News