மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்த டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீண்ட நாட்களுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் மக்கள் என்னை மீண்டும் முதல்வராக தேர்வு செய்தால் மட்டுமே அந்த நாற்காலியில் அமர்வேன் என்றும், மக்கள் முடிவு செய்யும் வரை முதல்வர் நாற்காலியில் அமரமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நவம்பர் மாதம் நடைபெறும் மஹாராஷ்டிரா தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி
அதுவரை தனது கட்சியை சேர்ந்த வேறு ஒருவர் தலைவராக இருப்பார். கட்சி எம்எல்ஏக்களுடன் கூட்டம் நடத்தப்படும், அதில் அடுத்த முதல்வர் யார் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். “இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க நான் சிறையில் இருந்து ராஜினாமா செய்யவில்லை, பாஜகவை தோல்வியடையச் செய்ய நினைத்தேன்.. அதனால் தான் சிறையில் இருக்கும் போது ராஜினாமா செய்யவில்லை. அவர்கள் நேர்மையாக இல்லாததால், நமது நேர்மையைக் கண்டு பயப்படுகிறார்கள். பணத்திலிருந்து அதிகாரம், அதிகாரத்திலிருந்து பணம் என்ற இந்த விளையாட்டின் ஒரு பகுதியாக நான் மாறவில்லை. நீதி மன்றத்தில் எனக்கு நீதி கிடைத்தது. இனி மக்கள் நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும். இனி டெல்லி மக்களின் முடிவிற்குப் பிறகுதான் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன்" என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
उनकी साज़िशें हमारे चट्टान जैसे हौसलों को नहीं तोड़ पाईं, हम फिर से आपके बीच में हैं। हम देश के लिए यूँ ही लड़ते रहेंगे, बस आप सब लोगों का साथ चाहिए - CM @ArvindKejriwal l LIVE https://t.co/LBVXYhNUGU
— AAP (@AamAadmiParty) September 15, 2024
கடந்த ஆண்டு மே மாதம் கெஜ்ரிவால் மக்கள் பணத்தை வீணடிப்பதாக சிக்கலில் சிக்கினார். 2020 மற்றும் 2022ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசாங்க வீட்டை புதுப்பிக்க ரூ. 45 கோடி செலவழித்துள்ளது. பளிங்கு கற்கள், பட்டு உட்புறங்கள், உயர்தர மின் சாதனங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கன் கூறுகையில், கெஜ்ரிவால் தனது வீட்டிற்கு நிறைய செலவு செய்துள்ளார், ஆனால் எளிமையாக வாழ்வது போல் நடிக்கிறார். ஷீலா தீட்சித் பொறுப்பேற்ற 15 ஆண்டுகளில் அவரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வீடுகளுக்கு மிகக் குறைவான பணத்தையே செலவிட்டதாகக் கூறினார்.
கெஜ்ரிவால் ராஜினாமா
முதல்வர் பதவியில் இருந்து சிறிது காலம் விலகுவேன் என்று தெரிவித்த கெஜ்ரிவால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சமீபத்தில் மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கு ஒன்றில் இருந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். நான் நேர்மையானவர் என்று மக்கள் நம்பி, என்னை மீண்டும் முதல்வராக நிறுத்தினால் மட்டுமே அந்த பதவியில் இருப்பேன் என்று கெஜ்ரிவால் கூறினார். குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவால் உடனே பதவி விலக வேண்டும் என்று முன்பே பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூன்வாலா தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடி நாளை 3 மாநிலங்களுக்குப் பயணம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ